இலங்கை
சுதந்திரதின எதிர்ப்பு; 7 பேருக்குத் தடை!

சுதந்திரதின எதிர்ப்பு; 7 பேருக்குத் தடை!
மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், சுதந்திரதினமான இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு பேருக்குத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி, செயலாளர் சுகந்தினி, அரசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன், சிவில் சமூக செயற்பாட்டாளர் இ.செல்வகுமார் ஆகியோருக்கே இந்தத் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.