Connect with us

சினிமா

திருமணமான இயக்குநருடன் டேட்டிங்கில் சமந்தா.? ரசிகர்களுக்கு பீதியை கிளப்பிய போட்டோஸ்

Published

on

Loading

திருமணமான இயக்குநருடன் டேட்டிங்கில் சமந்தா.? ரசிகர்களுக்கு பீதியை கிளப்பிய போட்டோஸ்

கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் உடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றதோடு கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இவர்களின் நெருக்கத்தை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால்  திடீரென இவர்களுக்குள்ளே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான்கு ஆண்டுகளிலேயே அதிகாரபூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.சமந்தாவை பிரிந்த சிறிது காலத்திலேயே நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை டேட்டிங் செய்ய ஆரம்பித்தார். இவர்களுடைய புகைப்படங்கள் வெளியான போதும் அது தொடர்பில் மௌனம் காத்தனர். எனினும் திடீரென தங்களுடைய திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்து அனைவருக்கும் தமது காதலை வெளிப்படுத்தி இருந்தனர்.d_i_aஅதன் பின்பு சமீபத்தில் நாக சைதன்யா – சோபிதா துலிபாலா திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் நாக சைதன்யா தான் இப்போது தான் திருமண வாழ்க்கையை முழுதாக அனுபவிப்பதாகவும் சோபிதா பற்றியும் பெருமையாக பேசியிருந்தார்.இந்த நிலையில், நடிகை சமந்தா பிரபல இயக்குநர் ராஜ் நிதிமோரு என்பவரை டேட்டிங் செய்து வருவதாக சமூக வலைதள பக்கத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றன.  இதை அவதானித்த ரசிகர்கள், நடிகை சமந்தா ராஜ் நிதிமோருவை காதலிக்கிறாரா? அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதே என கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.சமீப காலமே ஆகவே சமந்தா குறித்த இயக்குனருடன் பணியாற்றி வருவதோடு மட்டுமில்லாமல் World Pickleball League போட்டியிலும் ராஜ் நிதிமோருடன் கலந்து கொண்டு இருந்தார். இதன்போது அவர்கள் கைகோர்த்து வந்த காட்சியும் பலரால் கவனிக்கப்பட்டது. எனவே சமந்தா தனது வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து உள்ளாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன