சினிமா
OTT_ க்கு பார்சல் பண்ணப்பட்ட கேம் சேஞ்சர்.. எந்த தளத்தில் தெரியுமா?

OTT_ க்கு பார்சல் பண்ணப்பட்ட கேம் சேஞ்சர்.. எந்த தளத்தில் தெரியுமா?
ராம்சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கி இருந்தார். இந்த படம் இவருடைய முதலாவது நேரடி தெலுங்கு படமாக அமைந்தது. இதனால் இந்த படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.இதில் ராம்சரண் ரெட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இவருடன் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ். ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். இதில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு சுமார் 75 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக கூறப்பட்டது.d_i_aமேலும் 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இது இயக்குனர் ஷங்கருக்கு மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர் தில் ராஜுக்கும் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.ஏற்கனவே தமிழில் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதன் பின்பு கேம் சேஞ்சர் படத்தின் மூலம் இதனை நிவர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அந்தப் படமும் தோல்வியை தழுவியுள்ளது. இதன் மொத்த வசூலே சுமார் 180 கோடி என கூறப்படுகிறது.இந்த நிலையில், கேம் சேஞ்சர் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பெப்ரவரி 7-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் 27 நாட்களுக்கு உள்ளையே ஓடிடியில் வெளியாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.