இலங்கை
இலங்கையில் பல நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரிப்பு

இலங்கையில் பல நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரிப்பு
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண்ணானது இன்றைய தினம் சிறியளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மட்டம் வரை உயர்வடைந்திருந்ததாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் ஆய்வு பிரிவு அறிவித்துள்ளது.
இன்றையதினம் காற்றின் தரச்சுட்டெண் 50 முதல் 150 வரையான மட்டத்தில் நிலவயது.
எனவே, சுவாச ரீதியான பாதிப்புகளை கொண்டுள்ளவர்கள் வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் நாட்களுக்கும் குறித்த நிலை நீடிக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.