இலங்கை
சடுதியாக வீழ்ச்சியடைந்த கொழும்பு பங்குச்சந்தை

சடுதியாக வீழ்ச்சியடைந்த கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (05) பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதன்படி, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதிக்குப் பிறகு வரலாற்றில் ஒரே நாளில் பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று பாரியளவில் சரிவடைந்துள்ளது.
அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 500.39 புள்ளிகளால் குறைவடைந்துள்ளது.
அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 16,456.10 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 6.35 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.