Connect with us

உலகம்

பிலிப்பைன்ஸ்-அமெரிக்கா மீண்டும் கூட்டுப்போர் பயிற்சி!

Published

on

Loading

பிலிப்பைன்ஸ்-அமெரிக்கா மீண்டும் கூட்டுப்போர் பயிற்சி!

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தென்சீனக் கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடுகிறது.  பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் உள்ளிட்ட நாடுகளும் அந்த பகுதிகளுக்கு உரிமை கோருகின்றன. 

அந்த நாடுகளுக்கும், சீனாவுக்கும் இடையே அவ்வப்போது அங்கு மோதல் ஏற்படுகிறது. குறிப்பாக அங்கு செல்லும் பிலிப்பைன்ஸ் மீன்பிடி படகுகள் மீது சீன கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்ற நிலையில்

Advertisement

பிலிப்பைன்சுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கி சர்ச்சைக்குரிய அந்த பகுதியில் பிலிப்பைன்சுடன் இணைந்து அமெரிக்கா கூட்டுப்போர் பயிற்சியை நடத்தி வருகின்றது.

இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் இரு நாடுகளும் நேற்று மீண்டும் கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கின. இதில் அமெரிக்காவின் பி.1-பி குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் எப்.ஏ-50 போர் விமானங்கள் போன்றவை ஈடுபடுத்தப்பட்டதாக பிலிப்பைன்ஸ் விமானப்படை செய்தித்தொடர்பாளர் மரியா கான்சுலோ தெரிவித்துள்ளார்.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன