Connect with us

விளையாட்டு

40-வது பிறந்தநாளில் ரொனால்டோ சொன்ன அந்த வார்த்தை: மோதிக் கொள்ளும் ரசிகர்கள்

Published

on

Cristiano Ronaldo on his 40th birthday I am the greatest Tamil News

Loading

40-வது பிறந்தநாளில் ரொனால்டோ சொன்ன அந்த வார்த்தை: மோதிக் கொள்ளும் ரசிகர்கள்

சர்வதேச கால்பந்து அரங்கில் முன்னணி வீரராக வலம் வருபவர் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 37 வயதான இவர் கால்பந்து விளையாட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும், சிறந்த வீரர்களுக்கென வருடாவருடம் வழங்கப்படும் தங்க கால்பந்து கோப்பையை 5 முறை வென்றுள்ளார்.தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபிய கால்பந்து கிளப் அணியான அல்-நாஸ்ர் எஃப்சி அணியை வழிநடத்தி வருகிறார். தொழில்முறை கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் (865) அடித்தவர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். 2022 ஃபிஃபா உலகக் கோப்பை சாம்பியனான லியோனல் மெஸ்ஸி, 821 கோல்களுடன் எலைட் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.இந்நிலையில்,  கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்று புதன்கிழமை (ஜன.5) தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ரொனால்டோ உலகத்திலேயே சிறந்த கால்பந்து வீரர் அவர்தான் என்றும், தன் கால்கள் சொல்லும் வரை தான் கால்பந்து விளையாடுவேன் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக ஸ்பெயின் தொலைக்காட்சி சேனலான லா செக்ஸ்டா-வுக்கு அளித்த பேட்டியில் ரொனால்டோ கூறுகையில், “கால்பந்து வரலாற்றில் நான் தான் அதிக கோல் அடித்தவன். எனக்கு இடது கால் பழக்கம் இல்லை. என்றாலும், இடது காலால் அடித்த கோல்களுக்காக வரலாற்றில் முதல் 10 இடங்களில் இருக்கிறேன். இவை எண்கள், இதுவரை இல்லாத முழுமையான வீரர் நான். நான் என் தலையால் நன்றாக விளையாடுகிறேன், நான் நல்ல ஃப்ரீ கிக்குகளை எடுக்கிறேன், நான் வேகமாக இருக்கிறேன், நான் வலிமையாக இருக்கிறேன், நான் குதிக்கிறேன். என்னை விட சிறந்தவர்களை நான் பார்த்ததில்லை.” என்று கூறினார். இந்த நிலையில், ரொனால்டோ தன்னை தானே புகழ்ந்தும் மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்களை சுட்டிக்காட்டாமல் பெருமையுடன் தன்னைப் பற்றி குறிப்பிட்டு இருப்பது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதள பக்கங்களில் ரொனால்டோ ரசிகர்களும் மற்ற வீரர்களும் மாறி மாறி மோதிக் கொண்டு வருகிறார்கள். இதனால், சமூக வலைதள பக்கங்கள் போர் களமாக மாறியிருக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன