பொழுதுபோக்கு
‘கேம் சேஞ்சர்’ முதல் ‘அலங்கு’ வரை… இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்!

‘கேம் சேஞ்சர்’ முதல் ‘அலங்கு’ வரை… இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்!
இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரியா பவானி ஷங்கர் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ஹாஸ்டல். கட்டுப்பாடுகள் அடங்கிய அந்த ஹாஸ்டலிலிருந்து பிரியா பவானி சங்கர் எப்படி தப்பித்து வெளியே வந்தார்? அவர் ஏன் அந்த விடுதிக்குள் சென்றார் என்பது தான் ‘ஹாஸ்டல்’ படத்தின் மொத்தக் கதை. இப்படம் கடந்த 3-ந் தேதி சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் `அலங்கு’. இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதாநாயகனாக குணாநிதி நடித்துள்ளார். மேலும் மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. சங்கமித்ரா அன்புமணி தயாரித்துள்ள இப்படம், தமிழக – கேரள எல்லைப்பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆக்சன் – திரில்லர் டிராமாவாக உருவாகி உள்ளது. இந்த நிலையில் இப்படம் கடந்த 4-ந் தேதி டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.ரேவந்த் லெவகா இயக்கத்தில் ரவி பிரகாஷ் நடித்துள்ள படம் ‘கோபாலி’. இந்த படம் குற்றம் மற்றும் பழிவாங்கும் திரில்லர் கதையில் உருவாகியுள்ளது. இப்படத்தில் சியாமளா, ராக்கி சிங், வெங்கட், தருண் ரோஹித், டாக்டர் பரத் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 4-ந் தேதி ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் மலையாள நடிகர் ஷான் நிகம் நடிப்பில் வெளியான படம் ‘மெட்ராஸ்காரன்’. இந்த படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் ஜெகதீஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை (7-ந் தேதி) ஆஹா மற்றும் சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டிகளை மையப்படுத்திய புதிய ஆவணப்படம் ஒன்றை நெட்பிளிக்ஸ் தயாராத்து உள்ளது. இந்த ஆவணப்படத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளில் விளையாடிய முன்னாள் வீரர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டிகளும் சில இடங்களில் காட்சியாக வைக்கப்படுகின்றன. இந்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் நாளை வெளியாக உள்ளது.ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. இதில், இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். ஐஏஎஸ் அதிகாரியான ராம் சரணுக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் இடையே நடக்கும் அதிகார பிரச்சினையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. கேம் சேஞ்சர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் நாளை வெளியாக உள்ளது.விவேகானந்தன் வைரலானு என்பது மலையாள நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். இதில் ஷைன் டாம் சாக்கோ, ஸ்வாசிகா விஜய், கிரேஸ் ஆண்டனி, மரீனா, ஜானி ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளனர். கமல் இயக்கிய இந்தப் படத்தை நெடியத் நசீப், பி.எஸ்.செல்லிராஜ், கமாலுதீன் சலீம் ஆகியோர் தயாரித்துள்ளனர். அரசு ஊழியரான விவேகானந்தன், தனது வாழ்க்கையில் வரும் ஐந்து பெண்களுடன் இணைந்து செல்லும் கதை இது. இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் ‘டாகு மகாராஜ்’. இப்படத்தில் பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் சாந்தினி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். எஸ் தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகிற 9-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.