விளையாட்டு
IND vs ENG Live Score, 1st ODI: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் – இந்தியா பவுலிங்

IND vs ENG Live Score, 1st ODI: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் – இந்தியா பவுலிங்
IND vs ENG 1st ODI Live Cricket Score: இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் டி20 தொடர் நடைபெபெற்ற நிலையில், தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs England LIVE Cricket Score, 1st ODIஇந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1:30 மணி முதல் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகரில் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் பேட்டிங் ஆடுவதாக அறிவித்துள்ளது.கோலி இல்லைஇந்த ஆட்டத்தில் துரதிருஷ்டவசமாக விராட் விளையாடவில்லை. அவருக்கு நேற்று இரவு முழங்கால் பிரச்சனை ஏற்பட்டதால், அவர் இந்தப் போட்டியில் ஆடாமல் ஓய்வு எடுத்து வருகிறார். இரு அணிகளின் பிளேயிங் லெவன்இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி. இங்கிலாந்து: பென் டக்கெட், பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், சாகிப் மஹ்மூத்.