பொழுதுபோக்கு
Vidaamuyarchi Movie Release Live Updates: ஆக்சனில் கலக்கும் அஜித்; விடாமுயற்சி படம் குறித்து ரசிகர்கள் கருத்து

Vidaamuyarchi Movie Release Live Updates: ஆக்சனில் கலக்கும் அஜித்; விடாமுயற்சி படம் குறித்து ரசிகர்கள் கருத்து
Vidaamuyarchi Movie Review, Rating and Release Live Updates: அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று (பிப்ரவரி) உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கிய இத்திரைப்படம், தமிழக அரசின் காலை 9 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதியும் பெற்றுள்ளது.அஜர்பைஜான் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் அர்ஜுன் சர்ஜா, த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், விஜய் ரம்யா ஆகியோரும் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு பாடல்களை அமைத்துள்ளார். விடாமுயற்சி படத்திற்கு தணிக்கை வாரியம் (CBFC) U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. விடாமுயற்சி படம் ரூ 40 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலுடன் பிரம்மாண்டமான ஓபனிங்கைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விடாமுயற்சி படம் ஜனவரி 2025 இல் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் “தவிர்க்க முடியாத சூழ்நிலைகள்” காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில், அஜீத் குமாரின் சம்பளம் 110 முதல் 120 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. 5863 ஷோக்களுக்கு சுமார் 4-8 லட்சம் டிக்கெட்டுகளை விற்று, அஜீத் குமார் நடித்துள்ள விடாமுயற்சி படம் ஏற்கனவே 8.86 கோடி ரூபாய் முன்பதிவு செய்துள்ளதாக சாக்னில்க் தெரிவித்துள்ளது.‘விடாமுயற்சி’ திரைப்படத்தை காண வெற்றி திரையரங்கத்திற்கு வந்துள்ளார் நடிகை த்ரிஷா.‘விடாமுயற்சி’ திரைப்படம் பார்க்க வெற்றி திரையரங்கம் வந்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தமிழகத்தில் நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் இன்று வெளியானது. திரையரங்குகள் முன்பு நடனம் ஆடியும், பட்டாசு வெடித்தும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.