விளையாட்டு
அடுத்த போட்டியில் கோலி ஆடுவாரா? வெளியேறப் போவது யார்? தலைவலியில் ரோகித்

அடுத்த போட்டியில் கோலி ஆடுவாரா? வெளியேறப் போவது யார்? தலைவலியில் ரோகித்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் டி20 தொடர் நடைபெபெற்ற நிலையில், தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.இந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று வியாழக்கிழமை நாக்பூரில் நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், தொடரில் இந்தியா 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.