இலங்கை
குளிருக்கு மூட்டிய தீ பற்றியது உடையில்! யுவதி பரிதாபச் சாவு

குளிருக்கு மூட்டிய தீ பற்றியது உடையில்! யுவதி பரிதாபச் சாவு
குளிருக்கு மூட்டிய தீ, உடையில் பற்றிப்பிடித்ததில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் – மடுப் பகுதியைச் சேர்ந்த மேரி எமில்டா (வயது 27) என்ற யுவதியே உயிரிழந்தவராவார்.
ஜனவரி மாதம் 12ஆம் திகதி குளிர் காய்வதற்காக அவர் தீ மூட்டியபோது, அவரின் ஆடையிலும் தீப்பற்றியுள்ளது. இதன்போது படுகாயங்களுக்கு உள்ளான அந்த யுவதி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பயனளிக்காமல் நேற்று உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.