இலங்கை
சம்மாந்துறையில் பெளஸ்தீன் தப்லீகியினால் ஹஜ் -உம்ரா பற்றி தெளிவூட்டல்!

சம்மாந்துறையில் பெளஸ்தீன் தப்லீகியினால் ஹஜ் -உம்ரா பற்றி தெளிவூட்டல்!
ஹஜ் – உம்ரா பயணங்களை மேற்கொள்ள இருக்கும் ஹாஜிகளுக்கான வழிகாட்டல் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் ஏ.பெளஸ்தீன் (தப்லீகி) தலைமையில் இன்று (07) வெள்ளிக்கிழமை மாலை வேளையில் இடம்பெற்றது.
ஹஜ் – உம்ராவில் நாம் எவ்வாறு திருப்திகரமாக மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக காணொளி மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.
இதன் போது, ஹஜ் – உம்ரா பயணங்களை மேற்கொள்ள இருக்கும் ஹாஜிகளினால் பல கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்களையும் ஏ.பெளஸ்தீன் (தப்லீகி) வழங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (ப)