விளையாட்டு
பும்ரா?… கம்மின்ஸ் முதல் அன்ரிச் நோர்ட்ஜே வரை: சாம்பியன்ஸ் டிராபியை தவற விடும் டாப் வீரர்கள் இவங்கதான்!

பும்ரா?… கம்மின்ஸ் முதல் அன்ரிச் நோர்ட்ஜே வரை: சாம்பியன்ஸ் டிராபியை தவற விடும் டாப் வீரர்கள் இவங்கதான்!
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19 ஆம் தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும், முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முக்கியமான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23 ஆம் தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. இந்தப் போட்டிக்கு முன் பிப்ரவரி 20 ஆம் தேதி வங்கதேசத்தையும், மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.இந்நிலையில், ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியில் சில நாட்டு அணிகளின் முன்னணி வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல் நிலவுகிறது. அந்த வீரர்கள் யார்? ஏன் அவர்களால் பங்கேற்க முடியவில்லை? காரணம் என்ன? என்பது குறித்து இங்குப் பார்க்கலாம். கம்மின்ஸ் கணுக்கால் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான பேட் கம்மின்ஸ் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். பும்ராஇந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது முதுகில் காயத்தை எதிர்கொள்வதால் விளையாடுவது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது.