பொழுதுபோக்கு
போர்ச்சுக்கல் ரேஸ் ட்ராக்கில் அஜித்: செல்ஃபி வீடியோ வைரல்; ஃபேன்ஸ் ஒரே ஹேப்பி!

போர்ச்சுக்கல் ரேஸ் ட்ராக்கில் அஜித்: செல்ஃபி வீடியோ வைரல்; ஃபேன்ஸ் ஒரே ஹேப்பி!
தற்காலிகமாக படப்பிடிப்பில் இருந்து விலகி துபாய் கார் ரேஸில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித் குமார் அங்கிருந்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது போர்ச்சுக்கலில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜித். எவ்வித சினிமா பின்புலமும் இல்லாமல், தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள அஜித், நடிப்பு மட்டுமல்லாமல், துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ், கார் ரேஸ் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பைக்கில் வோல்ட் டூர் செல்லும் அஜித், கடந்த 2022ம் ஆண்டு வெளியான துணிவு படத்திற்கு பிறகு, விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் விடா முயற்சி திரைப்படம், நேற்று (பிப் 6) திரையரங்குகளில் வெளியானது. 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, அஜித் நடிப்பில் வெளியான படம் விடா முயற்சி என்பதால், படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் அடுத்து வெளியாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்ட நடிகர் அஜித், தற்காலிகமாக நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அஜித்தின் இந்த அறிவிப்பு, தமிழ் சினிமா வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அஜித் தூபாயில் நடைபெற்று வரும் கார் ரேஸ் போட்டியில் தனது அணியுடன் பங்கேற்று வருகிறார். இதில் முதல் சுற்று போட்டியில், அஜித்தின் அணி 3-வது இடத்தை பிடித்து அசத்தியது. அடுத்த சுற்று போட்டிகளுக்காக தீவிரமாக தயாராகி வரும் அஜித், அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, போர்ச்சுக்கல் கார் ரேஸிங் ட்ராக்கில் இருந்து அவர் வெளியிட்டுள்ள செல்பி வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.