இலங்கை
வட்டுக்கோட்டை மருத்துவமனை நலன்புரிச் சங்க நிர்வாகத் தெரிவு கூட்டம்!

வட்டுக்கோட்டை மருத்துவமனை நலன்புரிச் சங்க நிர்வாகத் தெரிவு கூட்டம்!
வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் எதிர்வரும் 22.02.2025 அன்று நடைபெறவுள்ளது.
இந்த கூட்டமானது நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் மருத்துவர் கயானா கெங்காதரன் தலைமையில், வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனையில், பி.ப 2.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
எனவே பொதுமக்களை உரிய நேரத்திற்கு இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். (ப)