பொழுதுபோக்கு
கோபத்தில் வேட்டியை கழற்றிய சரத்குமார்: கட்டிவிட்ட ராதிகா; சூர்யவம்சம் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!

கோபத்தில் வேட்டியை கழற்றிய சரத்குமார்: கட்டிவிட்ட ராதிகா; சூர்யவம்சம் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!
தமிழ் சினிமாவில், வில்லன் நடிகராக இருந்து ஹீரோவாக உயர்ந்தவர் சரத்குமார். 1988-ம் ஆண்டு வெளியாக கண் சிமிட்டும் நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமகமான இவர், புலன் விசாரணை படத்தில் விஜயகாந்துக்கு வில்லனாக நடித்திருந்தார். அதன்பிறகு மற்ற நடிகர்களின் படங்களில் முக்கிய கேரக்டரில் நடிக்க தொடங்கிய சரத்குமார், விஜயகாந்தின் 100-வது படமாக கேப்டன் பிரபாகரன் படத்தில், ஃபாரஸ்ட் ஆபீசர் கேரக்டரில் நடித்திருந்தார்.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சேரன் பாண்டியன் திரைப்படத்தில் விஜயககுமாருடன் இணைந்து நடித்த சரத்குமார், அடுத்து சூரியன், தசரதன், வேடன், ஐ லவ் இந்தியா, கட்டபொம்மன், நாட்டாமை, நம்ம அண்ணாச்சி, ரகசிய போலீஸ், நேதாஜி, அரவிந்தன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்த சரத்குமார், 1997-ம் ஆண்டு சூர்யவம்சம் என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தார். இந்த படத்தில், சக்திவேல், சின்ராசு என இரண்டு கேரக்டரில் நடித்திருந்தார்.இயக்குனர் விக்ரமன் இயக்கிய இந்த படத்தில், சரத்குமாருடன் தேவயானி, ராதிகா, மணிவண்ணன், சுந்தர்ராஜன், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அப்பா – மகன் இடையேயான பிரச்னையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிபடமாக அமைந்தது. மேலும், தெலுங்கு, இந்தி, கன்னடா உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் பெரிய வெற்றியை பெற்றிருந்தது.இந்த படத்தின் 2-ம் பாகம் வெளியாக உள்ளதாக கடந்த 2023-ம் ஆண்டு நடிகர் சரத்குமார் அறிவித்த நிலையில், இதற்கான ஒரு போட்டோ ஷூட்டும் வெளியாகி இருந்தது. மேலும் இந்த 2-ம் பாகத்திற்கான வேலையும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தில் நடந்த சுவாரஸயமாக அனுபவம் குறித்து இயக்குனர் ராஜகுமாரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில், நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் என வெற்றிப்படங்களை கொடுத்தவர் ராஜகுமாரன்.சூர்யவம்சம் படத்தில் மணிவண்ணனை கலாய்க்கும் கேரக்டரில் ஒரு காட்சியில் நடித்திருந்த ராஜகுமாரன், அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அப்போது இயக்குனர் விக்ரமனுக்கும், நடிகர் சரத்குமாருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடக்கும். அப்போது சரத்குமார் மிகவும் போகப்படுவார். இப்படிதான் ஒருநாள் இருவருக்கும் இடையே மோதல் வந்துள்ளது. அப்போது நான் ஸ்பாட்டில் இல்லை. அந்த சமயத்தில் கோபமான சரத்குமார், நான் கிளம்புகிறேன் என்று சொல்லி வேட்டியை கழற்றியுள்ளார்.இதை பார்த்த அருகில் இருந்த நடிகை ராதிகா அவருக்கு வேட்டி கட்டிவிட்டுள்ளார். அப்போது இருவருக்கும் கல்யாணம் ஆகவில்லை என்று ராஜகுமாரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இயக்குனருடன் மோதல் நடந்திருந்தாலும், சூர்வம்சம் படம், சரத்குமாருக்கு, அவரின் திரை வாழ்க்கையில் முக்கிய வெற்றிப்படமாக அமைந்து குறிப்பிடத்தக்கது.