Connect with us

பொழுதுபோக்கு

நிகழ்ச்சி மேடையிலே கலங்கி அழுத அர்ச்சனா: இந்த போட்டோ தான் காரணம்!

Published

on

VJ Archana

Loading

நிகழ்ச்சி மேடையிலே கலங்கி அழுத அர்ச்சனா: இந்த போட்டோ தான் காரணம்!

தமிழ் சின்னத்திரையின் முக்கிய தொகுப்பாளினியாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளருமான அர்ச்சனா, தான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி மேடையில் கண்ணீர்விட்டு அழுத நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் சின்னத்திரையில், அர்ச்சனா பிரபல தொகுப்பாளினியாக வலம் வருகிறார். பல தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.  பல நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் பங்கேற்றுள்ளார். இவரது வாழ்க்கை காமெடி டைம் (சன் டிவி) நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த நகைச்சுவை நிகழ்ச்சி மிகப் பெரிய வெற்றி பெற்றது.விஜே அர்ச்சனா நிகழ்ச்சியில் தனது பங்கேற்பிருக்காக அதிக அங்கீகாரத்தைப் பெற்றார். ‘என் வழி தனி வழி’ படத்தில் நடித்த அர்ச்சனா, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான, டாக்டர் படத்தில் தனது மகளுடன் இணைந்து நடித்திருந்தார். நான் சிரித்தால் படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஐஸ்வர்யா மேனன் ஆகியோருடன் நடித்திருந்த அர்ச்சன,  கடந்த 2004-ம் ஆண்டு. வினீத் முத்துக்கிருஷ்ணன் என்பவரை மணந்தார்.இந்த தம்பதிக்கு, ஜாரா வினீத் என்ற பெண் குழந்தையும் உள்ளது. தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பதோடு, தனது வாழ்க்கையைப் பற்றி ரசிகர்களுக்கு அப்டேட் செய்து வருகிறார். மேலும் தன்னை போலவே தனது மகளையும் தொகுப்பாளினியாக மாற்றியுள்ள அர்ச்சனா, அவருடன் இணைந்து ஜீ தமிழின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.தற்போது ஜீ தமிழின் சரிகம நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் அர்ச்சனா. இந்நிகழ்ச்சியில், பாடகர் ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பி.சரண், ஸ்வேதா மோகன், சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். சமீபத்தில் அர்ச்சனாவின் தாய் உடல்நலக்குறைவால் மரணமடைந்த நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சரிகம நிகழ்ச்சியில், பிரார்த்தனை செய்யப்பட்டது. அதே நிகழ்ச்சியில், அர்ச்சனா தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படமும் அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டது.இந்த புகைப்படத்தை பார்த்த அர்ச்சனா, மேடையிலேயே கண்ணீர்விட்டு அழுதார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன