விளையாட்டு
IND vs ENG: கோலி உள்ளே… யார் யார் வெளியே? இந்தியா பிளெயிங் 11 இழுபறி

IND vs ENG: கோலி உள்ளே… யார் யார் வெளியே? இந்தியா பிளெயிங் 11 இழுபறி
இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் டி20 தொடர் நடைபெபெற்ற நிலையில், தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.இந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று வியாழக்கிழமை நாக்பூரில் நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், தொடரில் இந்தியா 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. அடுத்ததாக, இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது. இந்தியா பிளெயிங் 11 எப்படி? இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முழங்கால் பிரச்சனை காரணமாக நட்சத்திர வீரர் கோலி ஆடாவில்லை. அவர் தற்போது நல்ல உடற்தகுதியிடன் இருப்பதாகவும், 2-வது ஒருநாள் போட்டியில் ஆடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், கோலிக்கு இடம் அளிக்கும் வகையில் இந்தியாவின் ஆடும் லெவன் வீரர்கள் வரிசையில் மாற்றம் செய்யப்படலாம். முதல் போட்டியில் அறிமுக தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் களம் கண்டார். அதே நேரத்தில் கோலிக்குப் பதிலாக ஷ்ரேயஸ் ஐயர் களமாடினர். தனது முதல் போட்டியில் பின்னடைவைப் பெற்ற ஜெய்ஸ்வால் பெரிதும் சோபிக்காமல் 15 ரன்னுக்கு அவுட் ஆனார். அதேவேளையில், ஷ்ரேயஸ் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 4-வது பேட்டராக வந்த அவர் 36 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால், இந்த இரண்டு வீரர்களை யாரை கழற்றி விடலாம் என்கிற தலைவலி இந்திய அணி நிர்வாகத்துக்கு வந்துள்ளளது. ஜெய்ஸ்வால் முதல் போட்டியில் சிறப்பாக செயல்படாத நிலையில், டாப் ஆர்டரில் வலது – இடது காம்பினேஷனுக்கு தேவைப்படுகிறார். 4-வது இடத்தில் ஆடி தனது திறனை நிரூபித்து இருக்கிறார் ஷ்ரேயஸ். எனவே, கோலியை அணியில் சேர்க்க, ஜெய்ஷ்வாலை நீக்கதான் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. கில்லை தொடக்க வீரர் இடத்திற்கு மாற்றிவிட்டு, 4-வது இடத்தை ஷ்ரேயஸ் ஐயருக்கு கொடுக்கும் பட்சத்தில், கோலியை 3-வது இடத்தில் ஆடலாம். பந்துவீச்சு வரிசையைப் பொறுத்தமட்டில், தரமான ஃபார்மில் இருக்கும் வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் . காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள குலதீப், ஷார்ட் பால்களை அதிகம் வீசுகிறார். முதல் போட்டியில் 9.4 ஓவர்களை வீசிய அவர், 53 ரன்களை விட்டுக்கொடுத்து, ஒரு விக்கெட்டை எடுத்தார். இதனால், இரண்டாவது போட்டியில், வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனத் தெரிகிறது. இந்தியாவின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, வருண் சக்ரவர்த்திசக்ரவர்த்தி.