Connect with us

விளையாட்டு

IND vs ENG LIVE Score, 2nd ODI: தொடரை கைப்பற்றுமா இந்தியா? இங்கிலாந்துடன் இன்று மோதல்

Published

on

India vs England 2nd ODI Live Cricket Score updates  Commentary 2025 Barabati Stadium Cuttack Tamil News

Loading

IND vs ENG LIVE Score, 2nd ODI: தொடரை கைப்பற்றுமா இந்தியா? இங்கிலாந்துடன் இன்று மோதல்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் டி20 தொடர் நடைபெபெற்ற நிலையில், தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.இந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று வியாழக்கிழமை நாக்பூரில் நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்  மூலம், தொடரில் இந்தியா 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 ஒடிசா மாநிலம் கட்டாக்கில் தொடங்கி நடைபெறுகிறது. முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய இருப்பதால் அதே உற்சாகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் இந்தியா களமாடும். அதேநேரத்தில், தொடரில் கம்பேக் கொடுக்க இங்கிலாந்து கடுமையாக போராடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. இரு அணி வீரர்கள் பட்டியல்: இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங்இங்கிலாந்து: பென் டக்கெட், பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், சாகிப் மஹ்மூத், கஸ் அட்கின்சன், மார்க் வூட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன