Connect with us

இலங்கை

பாரிய மோசடியில் ஈடுபட்ட பாடசாலை அதிபர்: முல்லைத்தீவில் போர்க்கொடி தூக்கிய மக்கள்!

Published

on

Loading

பாரிய மோசடியில் ஈடுபட்ட பாடசாலை அதிபர்: முல்லைத்தீவில் போர்க்கொடி தூக்கிய மக்கள்!

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம்(11) காலை பாடசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

 இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

Advertisement

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரால் பாடசாலை மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் ஏனைய இணைப்பாட விதான செயற்பாடுகள் வீழ்ச்சியடைவதுடன், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் நிதி மோசடிகள் என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், பாடசாலையின் வளர்ச்சியை சீர்குலைத்து பாடசாலை சொத்துக்களை மோசடி செய்யும் அதிபரை பாடசாலையிலிருந்து வெளியேற்றக் கோரி பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பெற்றோர்கள் இணைந்து இன்றையதினம்(11) காலை 8 மணியளவில் பாடசாலை நுழைவாயிலில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

 குறித்த அதிபர் தொடர்பான விடயங்கள் இரு செயலாளர்களாலும் வலயகல்விபணிப்பாளர், செயலாளர் கல்வி அமைச்சு, பிரதிக் கல்விப்பணிப்பாளர் – தேசிய பாடசாலை, கல்வி அமைச்சு என்பவற்றிற்கு நேரிலும், தொலைபேசியிலும், கடிதம் மூலமும் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் பெற்றோர் அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள் சங்கத்தினால் வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய குறித்த அதிபர் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சினால் விசாரணை குழு அமைக்கப்பட்டு ஆரம்ப புலனாய்வு விசாரணை தயாரிக்கப்பட்டு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டும் குறித்த அதிபரை வலயத்துடன் இணைத்தே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

 அவ்வாறு ஒரு விசாரணையை மாகாண கல்வி அமைச்சு மேற்கொள்ளவில்லை. அதனால் இவ் விசாரணை கண்துடைப்பாகவே நாங்கள் கருதுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

Advertisement

 குறித்த போராட்ட இடத்திற்கு வருகை தந்த ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் நிஷாந்தன் , தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர் இந்திக்க ஆகியோரிடம் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டிருந்தது. இதற்கான பிரதிகள் வடமாகாண பொதுச்சபை ஆணைக்குழு, ஆளுநர் செயலகம், ஆளுநர் குறைகேள் வலையமைப்பு, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி செயலகம் ஆகியோருக்கு குறித்த மகஜரினை தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

பொன் விழாவை குழப்பிய அதிபரே வெளியேறு, அழிக்காதே அழிக்காதே மாணவச் செல்வங்களின் கல்வியை அழிக்காதே, அபிவிருத்தி கணக்கிலிருந்த 17 இலட்சம் எங்கே? மோசடியில் மூழ்கிய அரக்கனே! 

பாடசாலையில் இருந்து வெளியேறு? சாதிக்க துடிக்கும் மாணவச் செல்வங்களை தடுக்காதே? மாகாண அமைச்சே ஊழல் நிரூபிக்கப்பட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அரச சொத்துக்களை ஊழல் செய்யதே? போன்ற வாசங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement

 குறித்த போராட்டத்தில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பெற்றோர்கள், பழையமாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன