தொழில்நுட்பம்
இன்று வெளியாகும் ஐபோன் எஸ்.இ 4: வாங்குவதற்கு முன்பு நீங்கள் அறிய வேண்டிய 5 விஷயங்கள் இதோ!

இன்று வெளியாகும் ஐபோன் எஸ்.இ 4: வாங்குவதற்கு முன்பு நீங்கள் அறிய வேண்டிய 5 விஷயங்கள் இதோ!
இன்று வெளியாகும் ஐபோன் எஸ்.இ 4 உலகம் முழுவதும் கிடைக்க வேண்டும் என ஆப்பிள் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஐபோன் வரிசையில், எஸ்.இ மாடல்கள் தான் விலை மலிவாக இருக்கும். முன்னதாக, ஐபோன் எஸ்.இ 3 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல், ரூ. 47,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், ஐபோன் எஸ்.இ 4 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் சந்தைகளில் கிடைக்கும் எனக் கூறப்படுவதால், அதன் விலை சற்று அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.SE அல்லது Special edition எனக் கூறப்படும் இந்த வகை ஐபோன்கள், அவற்றின் மறுசுழற்சி செய்யப்பட்ட பாகங்களுக்கு பெயர் பெற்றவை. அதாவது ஆப்பிள், ஏற்கனவே இருக்கும் பழைய ஐபோன் டெம்ப்ளேட்டை வடிவமைப்பிற்காகப் பயன்படுத்துகிறது. மேலும், புதிய வன்பொருள் மூலம் அதை மறுகட்டமைக்கிறது. பொதுவாக, இந்த ஐபோன்களில் ஒற்றை கேமரா இருக்கும். ஐபோன் எஸ்.இ 3-ல் நைட் மோட் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இவற்றை கருத்திற்கொண்டு ஐபோன் எஸ்.இ 4-ல் சில விஷயங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம்.டிசைன்: ஐபோன் எஸ்.இ 4, ஐபோன் 14-ன் வடிவமைப்பை போன்று இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆப்பிள் இன்னும் ஐபோன் 14- ஐ இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்கிறது. எனவே, ஐபோன் எஸ்.இ 4 வெளியான பின்னர் அது நிறுத்தப்படலாம். ஆற்றல்: ஐபோன் எஸ்.இ 4, ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 ப்ளஸில் இருப்பதை போன்ற A18 ப்ராசஸர் கொண்டு செயல்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஆப்பிள் இண்டலிஜென்ஸ் தொகுப்பின் ஒரு பகுதியாக இருப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. ஐபோன் எஸ்.இ 4-ல், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் எதிர்பார்க்கலாம்.ஐபோன் எஸ்.இ 4, ஐபோன் 17 வேரியன்டை முறியடிக்கும் என்று ஒரு கூற்று நிலவுகிறது. இது ஆப்பிள் சில காலமாக ரகசிய பணியாற்றி வரும் 5 ஜி மோடத்தை ஒருங்கிணைக்கும் என்று நம்பப்படுகிறது. குவால்காம் மீது அதன் சார்புநிலையைக் குறைக்க இது பயன்படும் என்றும் கூறப்படுகிறது.ஸ்பெக்-செக்: ஐபோன் எஸ்.இ 4-ல் ஆக்ஷன் பொத்தான் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த போனில் ஒற்றைக் கேமராவுடன் 48 மெகாபிக்ஸல் சென்சார் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் உலா வருகின்றன.விலை: 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஆகிய ஸ்டோரேஜ்களில் இவை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலை ரூ. 50 ஆயிரம் இருக்கலாம். இந்த போன் வெளியான பின்னர், ப்ரீ புக்கிங் நடைபெறும் என்று ஆப்பிள் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.