Connect with us

பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் திடீர் சந்திப்பு: படங்களில் நடிக்கிறாரா இந்த பிக்பாஸ் பிரபலம்?

Published

on

VJ Vishal Meet ravikuamr

Loading

சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் திடீர் சந்திப்பு: படங்களில் நடிக்கிறாரா இந்த பிக்பாஸ் பிரபலம்?

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் பிரபல சீரியல் நடிகர் வி.ஜே.விஷால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்தவுடன், பிரபல இயக்குனர் ஒருவரை சந்தித்து பேசியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானவர் வி.ஜே.விஷால், பிரபல செனல்களில் பணியாற்றிய இவர், அடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அப்போது சின்னத்திரையில் நடிகராக வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து, 2018-ம் ஆண்டு ஒளிபரப்பான கல்யாணமாம் கல்யாணம் என்ற சீரியலில், கவுரவ் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ஒரு வருடம் இந்த சீரியல் ஒளிபரப்பானது.அதனைத் தொடர்ந்து, அரண்மனை கிளி சீரியலில் நடித்த இவர், அடுத்து பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் 2-வது மகன் எழில் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த சீரியல் அவருக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும் இவருக்கான ரசிகர்கள் பட்டாளளத்தையும் அதிகரித்தது. அடுத்து தென்றல் வந்து என்னை தொடும், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 உள்ளிட்ட சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த வி.ஜே.விஷால், சமீபத்தில் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். ஆரம்பம் முதல் இறுதிவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து தனது கேரக்டருக்கான அங்கீகாரத்தை பெற்ற விஷால், இறுதிப்போட்டியில் 2-வது இடம் பிடித்து அசத்தினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கும் பட வாய்ப்பு கிடைத்து வரும் நிலையில், வி.ஜே.விஷால் அடுத்து படத்தில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அதே சமயம், பாக்கியலட்சுமி சீரியல் இவருக்கு பெரிய பெயரை பெற்று தந்தாலும், ஒரு கட்டத்தில் அந்த சீரியலில் இருந்து விலகிய விஷால், ஆல்பம் பாடல்களில் நடிக்க தொடங்கினார். இதனிடையே தற்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வந்துள்ள விஷால், சீரியல்களில் தொடர்வாரா அல்லது, திரைப்படங்களில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்,அவர், பிரபல இயக்குனர் ஒருவரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். இந்த புகைப்படங்களை விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.விஷ்னு விஷால் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக ஆர்.ரவிக்குமார், இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்துது. தற்போது தனது அடுத்த படத்திற்கான முயற்சியில் இறங்கியுள்ள, இயக்குனர் ரவிக்குமாரை வி.ஜே.விஷால் சந்தித்துள்ளார்.A post shared by V 🖖🏼 (@iamvjvishal)இந்த சந்திப்பின் மூலம் இருவரும் திரைப்படங்கில் இணைந்து பணியாற்ற உள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், நாளை (பிப்ரவரி 13) பிறந்த நாள் கொண்டாட உள்ள வி.ஜே.விஷால், தனது புதிய படத்திற்கான அறிவிப்பாக எதாவது அப்டே்ட் கொடுப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன