இலங்கை
நாடு திரும்பிய ஜனாதிபதி அநுர!

நாடு திரும்பிய ஜனாதிபதி அநுர!
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்ற உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவருடன் உலக அரச உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற குழுவினரும் இன்று காலை வியாழக்கிழமை (13) நாடு திரும்பியுள்ளனர்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்ற உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்த 10 ஆம் திகதி மாலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இங்கிருந்து பயணமாகியிருந்த நிலையில், அவர்கள் இன்று காலை 8.25 மணிக்கு டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.