பொழுதுபோக்கு
முத்து சொன்ன உண்மையால் கடுப்பான ரோஹினி: டிரைவர் பயிற்சியில் மீனா; செக் வைக்கும் விஜயா!

முத்து சொன்ன உண்மையால் கடுப்பான ரோஹினி: டிரைவர் பயிற்சியில் மீனா; செக் வைக்கும் விஜயா!
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இன்றைய எபிசோட்டில், ரோஹினி மீது முத்துவுக்கு சந்தேகம் வர, மனோஜ் ரோஹினியை பற்றி பெருமையாக பேசிக்கொண்டு இருக்கிறார்.இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், முருகனிடம் இருந்து போனை வாங்கிய வித்யா, அது குறித்து மீனாவுக்கு போன் பண்ணி சொல்கிறாள். நான் போனை கேட்டவுடன் கொடுத்துவிட்டார். நான் தான் உங்கள் போனை அட்டெண்ட் செய்வேன் என்று சொன்னவுடன், அதற்கும் சம்மதம் சொல்லிவிட்டார் என்று சொல்ல, அப்படி என்றால் அவர் நல்லவராகத்தான் இருப்பார் என்று சொல்லும் மீனா, நீங்க நாளைக்கு அவரிடம் பேச ஆரம்பிங்க என்று சொல்கிறாள்.இதை கேட்ட வித்யா, நீங்க சொன்ன சரியாகத்தான் இருக்கும் என்று சொல்லி, அப்படியே செய்கிறேன் என்று சொல்கிறாள். அடுத்த வித்யா வீட்டுக்கு வரும் ரோஹினியின் அம்மா அவசர அவசரமாக வித்யாவை அழைத்துக்கொண்டு, நகையை அடமானம் வைக்க செல்கின்றனர். மறுபக்கத்தில் மனோஷ், டேக்ஸ் கட்டவில்லை என்றால் கடைக்கு சீல் வைக்க போவதாக அதிகாரிகள் சொல்கின்றனர். அநத நேரத்தில் ரோஹினி ஓடி வந்து டேக்ஸ் பணத்தை கொடுக்கிறாள்.பணத்தை வாங்கிக்கொண்ட அதிகாரிகள் இனிமேல் டேக்ஸ் ஒழுங்க கட்டுங்க, இல்லை என்றால் கடைக்கு சீல் வைத்துவிடுவோம் என்று சொல்கின்றனர். அவர்கள் சென்றவுடன், தனது மானத்தை காப்பாற்றியதாக, ரோஹினிக்கு, மனோஜ் நன்றி சொல்கிறான். அதோடு காசு எப்படி வந்தது என்று கேட்க, கடன் வாங்கினேன் என்று ரோஹினி சொல்ல, அதை கேட்ட மனோஜ் அதிர்ச்சியாகிறான். இதேபோல் தான் நீ பல பிரச்னைகளில் சிக்கி இருக்கும்போது நான் கடன் வாங்கி இருக்கிறேன் என்று ரோகினி சொல்கிறாள்.இதை கேட்ட மனோஜ், எனக்கு நீ, உனக்கு நான், எனக்காக யாரும் இவ்வளவு ரிஸ்க் எடுக்கமாட்டாங்க, நீதான் என்னை எல்லா பிரச்னையில் இருந்தும் காப்பாற்றி இருக்க என்று சொல்கிறான். இதை கேட்ட ரோஹினி, இந்த விஷயத்தை வீட்டில் சொல்ல வேண்டாம். சொன்னால் முத்து கிண்டல் செய்வான் என்று சொல்லி உங்க அம்மாகிட்ட கூட சொல்லாத என்று சொல்கிறாள். இதை கேட்ட மனோஜ் திருதிருவென முழிக்கிறான். அடுத்து ரோஹினி வீட்டுக்கு வர, முத்து வீட்டுக்கு வந்து் க்ரிஷை பார்த்ததாக சொல்கிறான். இதை ரோஹினி ஒளிந்துகொண்டு கேட்கிறாள்.க்ரிஷ் அம்மா துபாயில் இருந்து வந்துட்டாங்களாம், அவங்கதான் அவனை இங்கு கூட்டி வந்துருக்காங்க, ஆனால் க்ரிஷ் பாட்டி இருவரும் முன்ன மாதிரி பேசவே இல்லை. அவங்க எதோ பயப்படுறாங்க, அவங்க இருக்க இடம் எனக்கு தெரியும் உன்னை ஒருநாள் கூட்டிக்கிட்டு போகிறேன் என்று சொல்கிறான். இதை கேட்ட ரோஹினி கோபப்படுகிறாள். அடுத்தாக வீட்டுக்கு வரும் ரவியும் ஸ்ருதியும் நாங்கள் ஒரே இடத்தில் வேலை பார்க்கிறோம் என்று சொல்ல, முத்துவும் மீனாவும் பாராட்டுகின்றனர்.அதன்பிறகு அடுத்த நாள் காலையில், டிரைவிங் ஸ்கூல் திறப்பதாக இருவரையும் முத்து மீனா இருவரும் அழைக்கின்றனர். மறுநாள் காலை டிரைவிங் ஸ்கூல் தொடங்க பூஜை நடக்கிறது. அண்ணாமலையின் பெயர் வைத்ததால் அவர் சந்தோஷப்பட, விஜயா வேண்டா வெறுப்பாக இருக்கிறார். அப்போது ஆரத்தி எடுக்க அண்ணாமலை விஜயாவை அழைக்க, முதலில், மறுத்தாலும் அதன்பிறகு ஆரத்தி எடுக்கிறார். முத்துவின் டிரைவிங் ஸ்கூலில் முதலாவது ஸ்டூடண்டாக மீனா சேர்கிறாள்.அதற்கு பணம் கட்ட வேண்டும் என்று சொல்ல, தனது செக் புக்கை அண்ணாமலையிடம் கொடுத்து முத்துவிடம் கொடுக்க சொல்கிறாள்.அப்போது ஸ்ருதியிடம் உனக்கு கார் ஓட்ட தெரியுமா என்று அண்ணாமலை கேட்க, அதற்கு ஸ்ருதி தெரியாது இன்ட்ரஸ்ட் இல்லை என்று சொல்கிறாள். அதற்கு ரோஹினி நீங்க கார் வாங்குனா என்ன பண்ணுவீங்க என்று கேட்க, அதை ரவி ஓட்டுவான் இல்ல டிரைவர் வைப்போம் என்று சொல்கிறாள். இதை கேட்ட விஜயா, அதான் மீனா ஓட்ட கத்துக்கிறாளே அவளையே டிரைவரா வச்சிக்கோங்க என்று சொல்கிறார். அத்துடன் எபிசோடு முடிகிறது.