Connect with us

பொழுதுபோக்கு

பிதாமகன் படம் உருவாக இன்ஸ்பிரேஷன் இந்த இந்தி படம் தான் : பாலா சொன்ன சீக்ரெட்

Published

on

Pithamagan Insperation

Loading

பிதாமகன் படம் உருவாக இன்ஸ்பிரேஷன் இந்த இந்தி படம் தான் : பாலா சொன்ன சீக்ரெட்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவர் பாலா. வித்தியாசமான மற்றும் தனித்துவமாக படங்களை இயக்குவதில் வல்லவராக இவர், சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட ஒரு நபரை முக்கிய கேரக்டராக வடிவமைத்து படத்தை கொடுத்து வருகிறார், பாலா படம் என்றாலே அதில் கண்டிப்பாக வித்தியாசம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.அந்த வகையில் வெளியான ஒரு படம் தான் பிதாமகன். பாலா இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில், விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா, கருணாஸ், மனோபாலா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சிம்ரன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,விக்ரம், லைலா, சங்கீதா ஆகிய மூவரும் இந்த படத்திற்காக தமிழக அரசின் விருதை வென்றிருந்தனர்.தமிழில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த பிதாமகன் திரைப்படம், சிவ புட்ரு என்ற பெயரில் தெலுங்கில், டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. கன்னடத்தில் அனந்தாரு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தில், உபேந்திரா தர்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர். 21 ஆண்டுகள் கடந்தாலும், பிதாமகன் திரைப்படம் இன்றும் ரசிகர்கள் விருப்பக்கூடியு ஒரு படமாகவும், இயக்குனர் பாலாவின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாகவும் அமைந்துள்ளது.இப்படி பல சிறப்புகள் இருக்கும் இந்த படம் உருவான இன்ஸ்பிரேஷனாக இருந்தது இரு இந்தி படம் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இதை பாலாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். கடந்த 1998-ம் ஆண்டு ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான படம் சத்யா. அனுராக் காஷ்யப் எழுதி தயாரித்த இந்த படத்தில், ஜே.டி சக்ரவர்த்தி, மனோஜ் பஜாபாய் (சூர்யாவின் அஞ்சான் படத்தில் வில்லனாக நடித்தவர்) இணைந்து நடித்திருந்தனர்.வெளியூரில் இருந்து மும்பை வரும் ஒருவர் சில குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கு ஒரு ரவுடியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் வெளியில் வந்து ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் இருவரில் ஒருவர் கொல்லபட, மற்றொருவர் வில்லன்களை பழி வாங்குவார். இந்த கதையை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டு தான் பிதாமகன் படத்தை எடுத்ததாக இயக்குனர் பாலா ஒரு பேட்டியில்கூறியுள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன