Connect with us

பொழுதுபோக்கு

ராதிகாவுடன் வீட்டுக்கு வரும் கோபி: ஈஸ்வரி ரியாக்ஷன் என்ன? பாக்கியலட்சுமி அப்டேட்!

Published

on

Radhika Gopi

Loading

ராதிகாவுடன் வீட்டுக்கு வரும் கோபி: ஈஸ்வரி ரியாக்ஷன் என்ன? பாக்கியலட்சுமி அப்டேட்!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராதிகாவுக்கும் கோபிக்கும் விவாகரத்து ஆகிவிட, பாக்யா கேட்ட கேள்விக்கு ராதிகா முக்கிய முடிவு எடுத்துள்ளார்.இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வர, கோபி விவாகரத்துக்கு சம்மதம் என்று சொல்கிறார். அதன்பிறகு ராதிகாவிடம் கேட்க, அவருக்கு பதிவாக அவரது வக்கீல் மனப்பூர்வமாக சம்மதம் என்று சொல்கிறார். இதை கேட்டு கோபி அதிர்ச்சியாக, நீதிபதி கோபியிடம் இருந்து ஜீவனம்சம் எதாவது வேண்டுமா என்று கேட்கிறார்.தனக்கு எதுவும் வேண்டாம். விவாகரத்து மட்டும் போதும் என்று ராதிகா சொல்லிவிட, நீதிமன்றம் இவர்களுக்கு விவாகரத்து வழங்குகிறது. வெளியில் வரும் ராதிகாவை சந்திக்கும் பாக்யா, நீங்கள் இருவரும் சேர்ந்துவிடுவீர்கள், எதாவது அதிசயம் நடக்கும் என்று நினைத்தேன் என்று சொல்கிறார். அதற்கு வாய்ப்பே இல்லை. இன்னொரு ரிலேஷன்ஷிப்பில் சிக்கமாட்டேன். கோபியை திருமணம் செய்ய முடிவு எடுத்ததே மயூக்காகத்தான். நான் எடுத்த முடிவு அவளுக்கு கஷ்டத்தை கொடுத்தது.இன்னும் மயூவை கஷ்டப்படுத்த விரும்பவில்லை என்று ராதிகா சொல்ல, பாக்யா ராதிகா இருவரும் வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது ராதிகா இனி நான் மொத்தமாக மாறி பழைய ராதிகாவாக இருக்க போகிறேன் என்று சொல்கிறார். அதற்கு பாக்யா நீங்கள் நம்பரை மாற்றினால் கண்டிப்பாக எனக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். அதன்பிறகு ராதிகா தனியாக இருக்கும் போது அவரிடம் பேசாலாமா என்று கோபி கேட்கிறார்.பாக்யாவும் அதற்கு சம்மதம் சொல்ல, தினமும் உன்னைப்பற்றி நான் தான் யோசித்துக்கொண்டு இருக்கிறேன். கடந்த காலத்திற்கு போக முடியும் என்றால் எல்லாவற்றையும் சரி செய்வேன் என்று சொல்ல, கடந்த காலத்திற்கு போக முடியும் என்றால், தப்புக்கு மேல் தப்பு செய்வீங்க என்று ராதிகா பதிலடி கொடுக்கிறாள். உனக்கும் மயூவுக்கும் நான் எதாவது செய்ய வேண்டும். என்ன வேண்டும் என்று கேள் என்று கேட்க, கடைசியா உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என்று ராதிகா சொல்கிறாள்.கோபியும் சரி என்று ராதிகாவை வீட்டுக்கு கூட்டி வருகிறார். காரில் வரும்போது வெள்ளை புறா ஒன்று என்ற பாடல் ஒளிக்க, இதை பாடலை ஞாபகம் இருக்கிறதா என்று கோபி கேட்க, நல்லா ஞாபகம் இருக்கிறது. எப்படி மறக்க முடியும் நான் கலேஜ்ல் படிக்கும்போது இந்த பாடலைதான் அடிக்கடி கேட்பேன் என்று சொல்கிறாள். அப்போது கோபி, அந்த நேரத்தில் நமக்கு காதல் துளிர்விட்டது. ஆனால் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொள்ளவில்லை.நம்முடைய வாழ்க்கை எப்படி மாறிவிட்டது, ஆனால் நீ என் வாழ்க்கையில் திரும்ப வருவேன்னு எதிர்பார்க்கல என்று சொல்ல, இதை பேச்சை நிறுத்திவிடலாம் வேறு எதாவது பேசலாம் என்று ராதிகா சொல்ல, அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன