Connect with us

டி.வி

ராதிகாவிடம் மன்னிப்பு கேட்ட ஈஸ்வரி.. இனியா கொடுத்த கிஃப்ட்..? பாக்கியா கொடுத்த விருந்து

Published

on

Loading

ராதிகாவிடம் மன்னிப்பு கேட்ட ஈஸ்வரி.. இனியா கொடுத்த கிஃப்ட்..? பாக்கியா கொடுத்த விருந்து

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்,  ராதிகாவை கோபி வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றார். இதை பார்த்த இனியா, ஈஸ்வரி அதிர்ச்சி அடைந்து நிற்கின்றார்கள்.இதன் போது உள்ளே சென்ற ராதிகா ஈஸ்வரியிடம் கோபி என்னை அழைத்து வந்ததால் மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ்வேன் என்று நினைத்து விட்டீர்களா? எங்களுக்கு சட்ட ரீதியாகவே விவாகரத்து நடந்து விட்டது. இன்னும் கொஞ்ச நாளில் அதற்கான நோட்டீஸும் வந்துவிடும் என்று சொல்லுகின்றார்.அதன் பின்பு ஈஸ்வரி பக்கத்தில் போயிருந்து உங்க பையன நான் பிரிக்க மாட்டேன். நீங்க பயப்பட வேண்டாம் என்று பேச, ராதிகாவிடம் மன்னிப்பு கேட்கின்றார் ஈஸ்வரி. மேலும் தான் விட்ட பிழைகளையும் சொல்லி பக்குவமாக கதைக்கின்றார்.இனியாவிடமும் இனிமேல் உனது டாடியை நான் பிரிக்க மாட்டேன். அவர்  உனக்கு மட்டும் தான் இனி  சொந்தம் என்று சொல்ல, இனியா  கண்கலங்குகின்றார். மேலும் அவரும் ராதிகாவிடம் மன்னிப்பு கேட்கின்றார். அதன் பின்பு மேக்கப் செட் எடுத்து வந்து இதனை மையூவிடம் கொடுக்குமாறு சொல்லுகிறார்.இறுதியில் பாக்கியா கையால் சாப்பிட வேண்டும் என்று சொல்ல, பாக்கியா  அவருக்கு உணவு பரிமாறுகின்றார். கோபியையும் அழைக்க அவரும் வந்து சாப்பிடுவதற்கு அமருகின்றார். ஆனால் எல்லோரும் அமைதியாகவே இருக்க, எல்லோரும் கலகலவென்று சிரித்துக் கொண்டு தானே சாப்பிடுவீர்கள் ஏன் இப்போது அமைதியா இருக்கின்றீர்கள் என்று ராதிகா கேட்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன