பொழுதுபோக்கு
‘ரேகாசித்திரம்’ முதல் ‘காதலிக்க நேரமில்லை’ வரை இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்

‘ரேகாசித்திரம்’ முதல் ‘காதலிக்க நேரமில்லை’ வரை இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்
நடிகர் ஆசிப் அலி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி வெளியான திரைப்படம் ‘ரேகாசித்திரம்’. ‘கிஷ்கிந்தா காண்டம்’ படத்துக்கு அடுத்ததாக ஆசிப் அலி நடித்த திரில்லர் படமாக இது அமைந்தது. மம்முட்டி நடித்த ‘தி ப்ரீஸ்ட்’ படத்தின் மூலம் பிரபலமான ஜோபின் டி சாக்கோ இந்தப் படத்தை இயக்கியுள்ளார். முஜீப் மஜீத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற மார்ச் மாதம் 14-ந் தேதி சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.ரவிமோகன் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் ‘காதலிக்க நேரமில்லை’. கிருத்திகா உதயநிதி இயக்கிய இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் கடந்த 11-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.ஹேடன் ஷ்லோஸ்பெர்க், ஜோஷ் ஹீல்ட் மற்றும் ஜான் ஹர்விட்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட தொடர் ’கோப்ரா காய்’ இந்த தொடர் 6 அத்தியாயங்களை கொண்டது. அதில் 5 அத்தியாயங்களை நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது இந்த தொடரின் 6 வது அத்தியாயத்தின் 3 பாகம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. தற்காப்பு கலையான கராத்தே கலையை அடிப்படையாக கொண்டு இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.ஹனீப் அடேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் ‘மார்கோ. ஆக்சன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ், அபிமன்யூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் நாளை (14-02-2025) சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் யாமி கவுதம் நடித்துள்ள படம் தூம் தாம். ரிஷப் சேத் இயக்கத்தில் ஜோதி தேஷ்பாண்டே, ஆதித்யா தார், லோகேஷ் தார், புனித் வாடன் மற்றும் பலர் தயாரித்துள்ள இப்படத்திற்கு கேசவ் தார் இசையமைத்துள்ளார். சண்டையும் காதலும் கலந்த ஒரு முழு பொழுதுபோக்கு திரைப்படமாகும். இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.விக்னேஷ் பழனிவேல் இயக்கத்தில் சஞ்சய் தயாரித்துள்ள வெப் தொடர் ’மதுரை பையனும் சென்னை பொண்ணும்’. இதில் பிரபல தொகுப்பாளர் ஏஞ்சலின் மற்றும் கண்ணா ரவி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடர் மொத்தம் 25 எபிசோடுகளை கொண்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தொடர் நாளை ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.மனோராஜ்யம் என்பது ஒரு மலையாளத் திரைப்படம். ரஷீத் பரக்கல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கோவிந்த் பத்மசூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இது ஒரு குடும்பத் திரைப்படமாகும். இந்த படம் நாளை மனோரமா மேக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.மை பால்ட் லண்டன், என்பது ரொமாண்டிக் கதைக்களத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் படமாகும். இந்த படத்தை டானி கிர்ட்வுட் மற்றும் சார்லோட் பாஸ்லர் இயக்கியுள்ளர். இப்படத்திற்கான கதையை மெலிசா ஆஸ்போர்ன் எழுதியுள்ளார். இது 2023-ம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான ‘மை பால்ட்’ படத்தின் தழுவலாகும். இப்படம் நாளை அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது.