Connect with us

இந்தியா

3 இளைஞர்கள் வெட்டி படுகொலை: 7 பேரைகைது செய்த புதுச்சேரி போலீசார்

Published

on

Puducherry Three youth hacked to death case 7 arrested Tamil News

Loading

3 இளைஞர்கள் வெட்டி படுகொலை: 7 பேரைகைது செய்த புதுச்சேரி போலீசார்

புதுச்சேரியில் 3 இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி சத்யா உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ள பாழடைந்த வீட்டில் பிரபல தாதா தெஸ்தான் மகன் ரஷி, திடீர் நகரை சேர்ந்த தேவா,ஜெ.ஜெ நகரை சேர்ந்த ஆதி ஆகிய 3 இளைஞர்கள் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.இது தொடர்பாக பெரிய கடை போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் டி.வி நகரை சேர்ந்த பிரபல ரவுடி சத்யா கொலை செய்தது தெரியவந்தது.விசாரணையில் முன்பகை காரணமாக  3 பேரையும் கடத்தியதாகவும், பாழடைந்த கட்டடத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தி கொன்றதாகவும் ரவுடி சத்யா அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன