தொழில்நுட்பம்
அசத்தலான கேமரா, துடிப்பான பேட்டரி திறன்; வாடிக்கையாளர்களை ஈர்க்குமா விவோ வி50? ஓர் விரிவான அலசல்!

அசத்தலான கேமரா, துடிப்பான பேட்டரி திறன்; வாடிக்கையாளர்களை ஈர்க்குமா விவோ வி50? ஓர் விரிவான அலசல்!
தற்போதைய சூழலில் ஸ்மார்ட்போன்கள் வாங்க வேண்டுமென்றால் ஏராளமான ஆப்ஷன்கள் நம் முன்னால் கொட்டிக் கிடக்கின்றன. ஒவ்வொரு வாரமும் ஏதோவொரு நிறுவனம் தங்கள் சார்பில் புதிதாக ஒரு போனை சந்தையில் களமிறக்கி வருகிறது. ஆங்கிலத்தில் படிக்கவும்: vivo V50 review: Stunning portraits, solid battery அதனடிப்படையில், சந்தையில் புதிதாக களமிறங்கி இருக்கும் விவோ வி50 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் செயல்திறன் குறித்து இக்குறிப்பில் அலசலாம். ரூ. 34,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்போன், மிட்ரேஞ்ச் தரத்தில் சிறப்பானதாக இருக்கிறதா?மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலும் கேமரா தரம் எதிர்பார்த்த வகையில் இருக்காது என ஒரு கருத்து நிலவி வருகிறது. அவ்வளவு ஏன், விலை மிக அதிகமாக இருக்கும் சில போன்களில் கூட கேமரா அந்த அளவிற்கு சிறப்பான செயல்பாடுகளை கொண்டிருக்கவில்லை என வாடிக்கையாளர்கள் குறை கூறுகின்றனர்.ஆனால், கேமரா பெர்ஃபார்மன்ஸில் அட்டகாசமான இடத்தை விவோ வி50 போன் பெறுகிறது. இதன் பிரதானமான கேமரா 50 மெகாபிக்ஸல் கொண்டு இயங்குகிறது. தனியாக டெலிபோட்டோ லென்ஸ் கொடுக்கப்படவில்லை என்றாலும், க்ராப் சென்சார் வடிவமைப்பில் இது செயல்படுகிறது. குறிப்பாக, போர்ட்ரெய்ட்ஸ் போட்டோ எடுக்கும் போது மிகவும் சிறப்பாகவே இருக்கிறது. இதேபோல், அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் செல்ஃபி கேமராவும் 50 மெகாபிக்ஸல் தரத்தில் இருக்கிறது. இந்த மூன்று கேமராக்களிலும் 4கே தரத்திலான வீடியோக்கள் எடுத்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.இந்தியன் வெட்டிங் மோட் என்ற ஆப்ஷனுடன் களமிறங்கி இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை விவோ வி50 பெறுகிறது. இதில் புகைப்படங்களை எடுக்கும் போது, அவை டி.எஸ்.எல்.ஆர் கேமராக்களில் எடுக்கப்பட்டதை போன்று காட்சியளிக்கின்றன. மேலும், இந்த போனில் தான் இந்தியாவில் முதன்முதலாக 3டி ஸ்டார் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வெளிப்புற தோற்றத்தில் போன், அட்டகாசமாக இருக்கிறது.இது தவிர IP68/IP69 ரேட்டிங்கும் பெற்றுள்ளதால், நீருக்கு அடியிலும் புகைப்படங்களை எடுக்க முடியும். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் குவாட் கர்வெட் டிஸ்பிளே, பிரீமியம் தரத்தை உருவாக்குகிறது. 6.77 இன்ச் அளவிளான தொடுதிரை இதில் இருக்கிறது. எனினும், ஸ்நாப்டிராகன் 7ஜென் 3 ப்ராசஸர் இதில் இடம்பெற்றுள்ளது வாடிக்கையாளர்களுக்கு சற்று ஏமாற்றம் அளிக்கக் கூடும். இதற்கு முன்னர் வெளியான விவோ வி40 போனிலும் இதே ப்ராசஸர் தான் வழங்கப்பட்டிருந்தது. அதில் இருந்து அப்டேட் செய்யப்படாதது பின்னடைவாகவே பார்க்கப்படும். 8 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் அல்லது 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் 256 ஜிபி ஆகிய வேரியண்ட்களில் இந்த போன் கிடைக்கிறது. அண்ட்ராய்ட் 15 இயங்குதளம் இதில் இடம்பெற்றுள்ளது. 6000 mAh பேட்டரியுடன், 90W ஃபாஸ்ட் சார்ஜிங் இதில் இணைந்து வருகிறது. எனவே, பேட்டரி செயல்திறன் குறித்த கவலையில்லை. கேம் அதிகமாக விளையாடுபவர்களுக்கான பிரத்தியேக போனாக இது இல்லாவிட்டாலும், தரமான கேமரா செயல்திறன் எதிர்பார்ப்பவர்கள் விவோ வி50 போனை பரிசீலிக்கலாம்.- Vivek Umashankar