Connect with us

தொழில்நுட்பம்

ஜியோவின் ரூ. 949 ரீசார்ஜுடன் இலவசமாக கிடைக்கும் ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா: புதுப்பிக்கப்பட்ட பிளான் விவரம் இதோ!

Published

on

Jio Plan

Loading

ஜியோவின் ரூ. 949 ரீசார்ஜுடன் இலவசமாக கிடைக்கும் ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா: புதுப்பிக்கப்பட்ட பிளான் விவரம் இதோ!

ஜியோ ஹாட்ஸ்டார் என்பது பிரத்யேக ஓ.டி.டி தளமாகும். இது, ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) இரண்டையும் நேரடியாக ஒளிபரப்பும். இம்முறை, இந்தியாவில் நடைபெறும் இந்த பிரபலமான கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை காண, மூன்று மாதங்களுக்கு ரூ. 149 இல் தொடங்கும் ரீசார்ஜ் திட்டங்களுடனான சந்தா தேவைப்படும். இருப்பினும், ஜியோ நெட்வொர்க் பயன்படுத்துபவர்கள், ரூ. 949 ரீசார்ஜ் திட்டத்துடன் ஜியோ ஹாட்ஸ்டாருக்கான இலவச சேவையை பெறலாம். ஆங்கிலத்தில் படிக்கவும்: Jio’s Rs 949 prepaid recharge plan now includes a complimentary Jio Hotstar subscription Jio.com இல் புதுப்பிக்கப்பட்ட பட்டியலின்படி, இப்போது ரூ. 949 ரீசார்ஜ் திட்டத்துடன், இலவசமாக ரூ.149 மதிப்புள்ள ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் பிளான் கிடைக்கிறது. இந்த திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும். ஒரு நாளைக்கு 2 ஜிபி அதிவேக 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற 5ஜி டேட்டாவுடன் இத்திட்டம் வருகிறது. கூடுதலாக, இது வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது.ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் திட்டமானது, விளையாட்டு நேரலைகள், சமீபத்திய திரைப்படங்கள் மற்றும் டிஸ்னி+ தொடர்களை உள்ளடக்கியது. இதில் விளம்பரங்கள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் மூலம் ஒரு மொபைல் போனில் 720p தரத்தில் நிகழ்ச்சிகளை காணலாம். மறுபுறம், ரூ. 299 சந்தா திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு 1080p தரத்தில் இரண்டு சாதனங்களில் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம். இறுதியாக ரூ. 499 திட்டத்தின் படி 4k தரத்தில் விளம்பரங்கள் இன்றி நிகழ்ச்சிகளை காணலாம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன