Connect with us

டி.வி

எங்கள் திருமணத்திற்கு இது தேவையில்லை..! பிக்பாஸ் பாவினி விளக்கம்..

Published

on

Loading

எங்கள் திருமணத்திற்கு இது தேவையில்லை..! பிக்பாஸ் பாவினி விளக்கம்..

பிக்பாஸ் சீசன் 6 இல் கலந்து கொண்டு மிகவும் அருமையாக விளையாடி வீட்டுக்குள் இருந்து ஒரு அருமையான காதல் அனுபவத்தினை எடுத்து வெளியேறியவர் தான் பவானி 3 வருடங்களாக சக போட்டியாளர் அமீரை காதலித்து வரும் இவர் தங்களது திருமண தேதியினை சமீபத்தில் அறிவித்திருந்தார்.திருமணத்தின் முன்னர் இருவரும் ஒரு வீட்டில் சேர்ந்து இருந்து வந்தமையினால் பல விமர்சனங்களிற்கு அழகிய இவர்கள் தற்போது தங்களது காதலினை உறுதிப்படுத்தும் முகமாக திருமணம் செய்துகொள்ள உள்ளனர். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் காதலித்து வருகின்றனர் என செய்திகள் வந்தபோது பலரும் இருவரும் வெவ்வேறு மதம் ,பவானி வயதில் பெரியவர் போன்ற பல விமர்சனங்களை வெளியிட்டு வந்தனர்.இந்த நிலையில் இதற்கெல்லாம் பதிலளிக்கும் முகமாக பாவினி “அமீர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். நான் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் எங்களின் திருமணம் மதம் சார்ந்து நடைபெறாது. நாங்கள் இருவரும் ஒன்றாக அனைத்துப் பண்டிகைகளையும் கொண்டாடுவோம். நான் வீட்டில் பூஜைகள் செய்வேன். அதே சமயம் அவர் நமாஸ் செய்வார். அவரின் பெற்றோர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் நாங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையும் கொண்டாடுவோம். அதனால் திருமணத்திற்காக எங்களில் யாராவது ஒருவர் மதம் மாறத் தேவையில்லை என நாங்கள் உணர்கிறோம்” என மிகவும் அழகாக ஒரு விளக்கத்தினை கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன