உலகம்
ஹொங் கொங்கில் மக்கள் தொகை 0.1 சதவீதத்தினால் அதிகரிப்பு!

ஹொங் கொங்கில் மக்கள் தொகை 0.1 சதவீதத்தினால் அதிகரிப்பு!
கடந்த ஆண்டு சீனாவின் ஹொங்கொங் மாநிலத்தில் 0.1 சதவீதத்தினால் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அங்கு மக்கள் தொகையானது 7.53 மில்லியனை கடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
புதிதாக பிறந்துள்ள குழந்தைகள் மற்றும் அங்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக மக்கள் தொகை அதிகரித்துள்ளது.
சீனாவின் ஹொங்கொங் மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டிறுதியில் 0.4 சதவீதமாக மக்கள் தொகை அதிகரித்தாக சீனாவின் புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹொங்கொங் மாநிலத்தில் மூன்றாவது ஆண்டாகவும் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.