விளையாட்டு
IND vs BAN Live Score: 2 ஓவரில் 2 விக்கெட்… மிரட்டி எடுக்கும் இந்தியா… தடுமாறும் வங்கதேசம்!

IND vs BAN Live Score: 2 ஓவரில் 2 விக்கெட்… மிரட்டி எடுக்கும் இந்தியா… தடுமாறும் வங்கதேசம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்கள்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நேற்று புதன்கிழமை (பிப்.19) முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. ஐ.சி.சி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 2023 முடிவுகள் அடிப்படையில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்தத் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Bangladesh LIVE Cricket Score, Champions Trophy 2025முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெறாத நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். சாம்பியன்ஸ் டிராபியில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதிக்குள் நுழையும் வாய்ப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். அதனால், ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடும். இந்தியா – வங்கதேசம் மோதல் இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று கராச்சியில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்று பிற்பகல் 2:30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேறும் 2-வது போட்டியில் குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ள இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. நேருக்கு நேர் இந்தியா – வங்கதேசம் அணிகள் இதுவரை 41 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 32-ல் இந்தியாவும், 8-ல் வங்கதேசமும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்: இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ்.வங்கதேசம்: தன்சித் ஹசன், சௌம்யா சர்க்கார், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தவ்ஹித் ஹ்ரிடோய், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், ஜாக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்