உலகம்
உக்ரைன் ஜனாதிபதிக்கு தனது ஆதரவை வெளியிட்ட பிரிட்டிஸ் பிரதமர்!

உக்ரைன் ஜனாதிபதிக்கு தனது ஆதரவை வெளியிட்ட பிரிட்டிஸ் பிரதமர்!
உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்வாதிகாரி என தெரிவித்துள்ள நிலையில் பிரிட்டிஸ் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் உக்ரைன் ஜனாதிபதிக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் பிரதமரை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரிட்டிஸ் பிரதமர் உக்ரைனின் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு ஆதரவை வழங்கினார் என டவுனிங் ஸ்ரீட் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் போர் இடம்பெறும்வேளை தேர்தல்களை இடைநிறுத்துவது பொருத்தமான விடயம் இரண்டாம் உலக போரின்போது பிரிட்டன் இதனை செய்தது எனவும் பிரிட்டிஸ் பிரதமர் தெரிவித்தார்.
ரஸ்யாவின் எதிர்கால ஆக்கிரமிப்புகள் வன்முறைகளை தடுத்து நிறுத்தக்கூடிய உக்ரைனின் சமாதானத்திற்கான அமெரிக்கா தலைமயிலான முயற்சிகளிற்கான ஆதரவையும் பிரிட்டிஸ் பிரதமர் இதன்போது வெளியிட்டுள்ளார்.