பொழுதுபோக்கு
பயணத்தை அனுபவிக்க நேரம் ஒதுக்குங்கள்: நடிகையின் அட்வைஸ்; யார் தெரியுமா?

பயணத்தை அனுபவிக்க நேரம் ஒதுக்குங்கள்: நடிகையின் அட்வைஸ்; யார் தெரியுமா?
கடந்த 2009-ம் ஆண்டு பெங்காலி மொழியில் வெளியான கால்பீலா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பாப்ரி கோஷ்.டூரிங் டாக்கீஸ், ஒய். பைரவா, சக்கைப்போடு போடு ராஜா, சர்கார் விஸ்வாசம் உள்ளிட்ட தமிழ் படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.2018-ம் ஆண்டு சன் டி.வி.யில் தொடங்கப்பட்ட நாயகி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன்பிறகு பாண்டவர் இல்லம் என்ற தொடரி்ல் ஹீரோயினாக நடித்தார்.ரவுடி பேபி, பூவா தலையா உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ள பாப்ரி கோஷ், தற்போது சின்னத்திரையின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.நடிப்பு மட்டுமல்லாமல் சமூகவலைதளங்களிலும் ஆக்டீவாக இருந்து வரும் பாப்ரி கோஷ். அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.