உலகம்
ஆப்கானிஸ்தானில் இரு தடவைகள் நிலநடுக்கம்!…

ஆப்கானிஸ்தானில் இரு தடவைகள் நிலநடுக்கம்!…
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு தடவைகள் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவலொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த தகவலில் முதலாவது தடவையாக இன்று (22) அதிகாலை 4.20 மணியளவில் 4.5 ரிச்டர் அளவில் – 100 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்
இதனைத் தொடர்ந்து இரண்டாவது தடவையாக இன்று அதிகாலை 4.33 மணிக்கு 4.2 ரிச்டர் அளவில் – 150 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு நிலநடுக்கங்களும் அடுத்தடுத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. (ப)