Connect with us

பொழுதுபோக்கு

ரோஹினி மீது அண்ணாமலை சந்தேகம்: போலீஸ் கட்டையை கிழித்த முத்து; சிறகடிக்க ஆசை அப்டேட்!

Published

on

Annamalai Rohini

Loading

ரோஹினி மீது அண்ணாமலை சந்தேகம்: போலீஸ் கட்டையை கிழித்த முத்து; சிறகடிக்க ஆசை அப்டேட்!

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரோஹினி மீது அண்ணாமலைக்கு சந்தேகம் வர, விஜயா மனோஜ்ஜிடம் மாட்டிக்கொண்டார்.இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், காய்கறி கடையில் அருண் காய்கறி வாங்கிக்கொண்டிருக்க, அப்போது அங்கு வரும் முத்து கீரை இருக்கிறதா என்று கேட்க, கடைக்காரன், இல்லை வந்துவிடும் என்று சொல்கிறான். இதை கேட்ட முத்து வெயிட் பண்ணிக்கொண்டு இருக்க, அருணிடம் வம்பிழுப்பது போல் பேசுகிறான். இதனால் கோபமான அருண் முத்துவின் சட்டையை பிடித்து வெளியே இழுத்து வருகிறான்.வெளியில் வந்தவுடன் முத்து அருணை பிடித்து தள்ளிவிட, அவன் விழப்போகிறான். இதை பார்த்த முத்து அருண் விழுந்துவிட கூடாது என்பதால், அவர் சட்டையை பிடித்து இழுக்க, சட்டை கிழிந்துவிடுகிறது. நீ விழுந்துவிட கூடாது என்பதால் தான் பிடித்தேன். நீ சட்டையை பிடிக்கவில்லை என்றால் எதுவும் நடந்திருக்காது என்று சொல்லிவிட்டு முத்து அங்கிருந்து சென்றுவிடுகிறான்.அதன்பிறகு வீட்டில், மீனா இட்லி வடகறி செய்ய, அண்ணாமலை மேலும ஒரு இட்லி வாங்கி சாப்பிட, விஜயா மீனாவை திட்டுகிறாள். இதை கேட்ட முத்து, புருஷன் நல்ல சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள் இங்கு தலைகீழாக இருக்கிறது என்று சொல்ல, அண்ணாமலை எனக்கு வயசாகுதுல்ல அதுக்காத்தான அப்படி சொல்கிறாள் என்று சப்போர்ட் செய்கிறான். அதன்பிறகு இனிமேல் நான் டயட் இருக்க போகிறேன் என்று மீனாவிடம் சொல்லும் விஜயா, உள்ளே சென்று பார்க்கிறாள்.அப்போது இட்லியும் வடகறியும் வாசனை அதிகமாக வர, யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறாள். அப்போது மனோஜ் அங்கு வர, நானும் டயட் இருக்கலாம்னு தான் பார்க்கிறேன். ஆனா இந்த மீனா விட மாட்டேன்கிறா, இதை யார்டயும் சொல்லிவிடாதே என்று விஜயா சொல்கிறாள். அதற்கு மனோஜ் விடும்மா எனக்கு தெரிஞ்ச ஒரு டயடடிஷன் இருக்காங்க அவங்கள்ட உங்களை கூட்டிக்கிட்டு போகிறேன் என்று சொல்கிறான். அடுத்து அண்ணாமலை ஸ்கூலுக்கு கிளம்புகிறார்.அப்போது ரோஹினி அங்கிள் இப்போது ஸ்கூலுக்கு போக மாட்டாரே என்று கேட்க, இன்றைக்கு பேரன்ஸ் மீட்டிங் இருக்கிறது என்று சொல்கிறார். முத்துவும் மீனாவும் அண்ணாமலையை ஸ்கூலில் ட்ராப் செய்துவிட்டு க்ரிஷ்காக வெயிட் பண்ணிக்கொண்டு இருக்க, ரோஹினியின் அம்மா இவர்களை பார்த்துவிடுகிறாள். இவர்களை வேற சமாளிக்கனுமா என்று யோசித்துக்கொண்டே வருகிறாள். அப்போது மீனா கேள்வி மேல் கேள்வி கேட்க, நான் மிஸ் பார்க்க போகனும் என்று சென்றுவிடுகிறாள்.அதன்பிறகு ரோஹினி வித்யா வீட்டில் மேக்கப் போட்டுக்கொண்டு, வீடியோ காலில் வருகிறாள். இதை பார்த்த பள்ளி டீச்சர், வீடியோ காலில் பேசும்போது கூட, கூலிங் க்ளாஸ் மாஸ்க் போடனுமா என்று கேட்க, இங்கு அதுதான் ரூல் என்று சமாளிக்கிறான். ரோஹினியின் குரலை அண்ணாமலை கேட்டால் கண்டுபிடித்துவிடுவார் என்று தெரிந்து வித்யாவை குரல் கொடுக்க சொல்ல, அப்போதும் அண்ணாமைலைக்கு ரோஹினி மீது சந்தேகம் வருகிறது. அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன