தொழில்நுட்பம்
டி.வி.எஸ் ரைடர் முதல் ராயல் என்ஃபீல்ட் ஸ்க்ராம் வரை; கடந்த 30 நாட்களில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பைக்குகளின் பட்டியல்!

டி.வி.எஸ் ரைடர் முதல் ராயல் என்ஃபீல்ட் ஸ்க்ராம் வரை; கடந்த 30 நாட்களில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பைக்குகளின் பட்டியல்!
இந்தியாவில் கடந்த 30 நாட்களாக கூகுளில் ட்ரெண்டிங்கில் இருக்கும் முதல் ஐந்து மோட்டார் சைக்கிள்களைப் பார்ப்போம்.1. டி.வி.எஸ் ரைடர்டி.வி.எஸ் முதன்முதலில் 2021 இல் ரைடரை அறிமுகப்படுத்தியது. இப்போது நாட்டில் அதிகம் விற்பனையாகும் 125 சிசி மோட்டார் சைக்கிள்களில் ரைடர் ஒன்றாகும். அக்டோபர் 2024 இல், இந்நிறுவனம் iGO அசிஸ்ட் என்ற புதிய மாடலை அப்டேட் செய்தது. இதன் பூஸ்ட் மோட் மூலமாக 0 முதல் 60 கிமீ வேகத்தை 5.8 வினாடிகளில் எட்டிப் பிடிக்க முடியும் என்று கூறப்படுகிறது. டி.வி.எஸ் ரைடரின் விலை ரூ.85,000 முதல் ரூ.1.13 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது (எக்ஸ் ஷோரூம்).2. ராயல் என்ஃபீல்டு கரில்லா 450ராயல் என்ஃபீல்டின் 450 சிசி செக்மென்டின் இரண்டாவது மாடலாக ஹிமாலயனுக்கு பின்னர் கரில்லா களமிறங்கியது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் சந்தைக்கு வந்த இந்த பைக்கின் விலை ரூ. 2.39 முதல் ரூ. 2.54 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது (எக்ஸ் ஷோரூம்). இதில், 452சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்டு எஞ்சின் வழங்கப்படுகிறது. இது 8,000 ஆர்.பி.எம்-ல் 39.50 பி.ஹெச்.பி-யையும், 5,500 ஆர்.பி.எம்-ல் 40 என்.எம் டார்க்கையும் கொடுக்கிறது. இதில், 6 கியர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.3. ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 440கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மோட்டோவர்ஸ் நிகழ்வின் போது இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முந்தைய வெர்ஷனை விட சற்று அதிக திறன் கொண்ட 443 சிசி எஞ்சின் கொண்டு இது இயங்குகிறது. இது 6,250 ஆர்.பி.எம்-ல் 25.4 பி.ஹெச்.பி-யையும், 4,000 ஆர்.பி.எம்-ல் 34 என்.எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதிலும் 6 கியர்கள் வழங்கப்பட்டுள்ளன.4. பஜாஜ் பல்சர் N150பஜாஜ் அதன் புதிய 150சிசி பல்சரை 2023 இல் அறிமுகப்படுத்தியது. இந்த பைக், நகரப் பயணங்களுக்கும், எப்போதாவது நெடுஞ்சாலைகளில் இயங்குவதற்கும் உகந்த செயல்திறனை வழங்குவதாக அறியப்படுகிறது. ரூ. 1.25 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) கிடைக்கும் பல்சர் N150 ஆனது, 8,500 ஆர்.பி.எம்-ல் 14.5 பி.ஹெச்.பி பவரையும், 6,000 ஆர்.பி.எம்-ல் 13.5 என்.எம் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த பைக்கில் 5 கியர்கள் உள்ளன.5. ஹோண்டா எஸ்.பி 125இந்த பைக்கின் லேட்டஸ்ட் வெர்ஷன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 6 கியர்கள் கொண்ட இந்த பைக், 10.72 பி.ஹெச்.பி மற்றும் 10.9 என்.எம் டார்க்கை வெளிப்படுத்துகிறது.