Connect with us

பொழுதுபோக்கு

பாக்கியலட்சுமி பப்ளிக் எக்ஸாம்: நான் பாஸா? பெயிலா? கோபி வைரல் வீடியோ!

Published

on

baakiya Govi Selvai

Loading

பாக்கியலட்சுமி பப்ளிக் எக்ஸாம்: நான் பாஸா? பெயிலா? கோபி வைரல் வீடியோ!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அந்த சீரியலில், வில்லன் மற்றும் காமெடியில் கலக்கி வரும் கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கோபி, பாக்யா, ராதிகா ஆகிய 3 கேரக்டர்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல், ஒரு இல்லத்தரசியின் வாழ்க்கையை தத்ரூபமாக காட்டி வருகிறது.தொடக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல், தற்போது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. விமர்சனங்களுக்கு முக்கிய காரணம், பழைய கதையையே மீண்டும் படமாக்கியது தான். பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, ராதிகாவை திருமணம் செய்துகொண்ட கோபி, பாக்யாவின் வளர்ச்சியில் பொறாமைப்பட்டு, அதை கெடுக்கவே சதி செய்து கொண்டிருந்தார். இதனால் சீரியலின் சமீபத்திய எபிசோடுகள், பரபரப்பை ஏற்படுத்த தவறிவிட்டது.மேலும் பாக்யாவின் மாமனார் ராமமூர்த்தி கேரக்டர் இறந்த உடனே பாக்கியலட்சுமி முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது. அதே சமயம் தற்போதுவரை, பாக்கியலட்சுமி சீரியல், ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் சீரியல் எப்போது முடியும் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இதனிடையே இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்பதை உணர்த்தும் வகையில், பாக்கியலட்சுமி கேரக்டரில் நடித்து வரும் நடிகை கே.எஸ்.சுசித்ரா, உதயா (சன் கன்னடா) டிவியில் ஒளிபரப்பாக உள்ள கன்னட சீரியலான சிந்து பைரவி சீரியலில் கமிட் ஆகியுள்ளார்.மேலும், பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், பாக்கியலட்சுமி என்ற பப்ளிக் எக்ஸாம் முடியும் நேரம் நெருங்கி விட்டது. நான் பாஸா இல்ல பெயிலா என்பது ரசிகர்கள் என்ற உங்கள் கையில் இருக்கிறது. மனதிலும் உள்ளத்திலும் சோர்வடைந்து விட்டேன். இருப்பினும் முயற்சிகள் தொடரும். ஒரு நாள் நல்ல நடிகன் என்ற இலக்கை அடைய இன்னும் என் பயணம் தொடரும்.. நன்றி வாழ்த்துக்கள்” என்று அதில் பகிர்ந்திருக்கிறார்.இதன் மூலம் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா?  அல்லது மேலும் தொடர உள்ளதா என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், கோபி அவ்வப்போது வெளியிடும் பதிவுகள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது, இவர் வெளியிட்ட பதிவுகளால், பாக்யலட்சுமி சீரியலின் முடிவு எந்த மாதிரி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன