Connect with us

பொழுதுபோக்கு

‘பார்வதி, நஸ்ரியா, சாய் பல்லவி…’ தனக்கு பிடித்த நடிகைகளை பட்டியலிட்ட சமந்தா; காரணம் இதுதான்!

Published

on

Samantha Ruth p

Loading

‘பார்வதி, நஸ்ரியா, சாய் பல்லவி…’ தனக்கு பிடித்த நடிகைகளை பட்டியலிட்ட சமந்தா; காரணம் இதுதான்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, நேற்று (பிப் 23) என்னிடம் எதையும் கேளுங்கள் என்று தனது இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்களுடன் உரையாடினார். இந்த நிகழ்வின்போது, ‘திரைப்படத் துறையில் சிறந்த கதாநாயகி’ முதல் தன்னை மகிழ்ச்சியடையச் செய்வது எது என்பது வரை பல கேள்விகளுக்கு சமந்தா பதிலளித்தார்.Read In English: Samantha Ruth Prabhu lists her favourite actresses: ‘Huge respect for Parvathy, Nazriya Nazim, Sai Pallavi…’சமந்தா தனது லைவ்வை தொடங்கிய பிறகு, ஒரு ரசிகர் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியைப் பார்க்கிறீர்களா என்று கேட்டார், நடிகர் “யாஸ்” என்று பதில் அளித்ததை தொடர்ந்து, உங்களுக்கு எது மகிழ்ச்சியளிக்கிறது என்று கேட்டுள்ளார். அதன்பிறகு ஒரு ரசிகர், “ஹ்ரு சாம்??? உங்கள் தோல் பிரகாசிக்கிறது, உங்கள் புன்னகை மீண்டும் சிரிக்கிறது. உங்கள் மீது எனக்கு அன்பு இருக்கிறது. இதற்கு, ‘புன்னகை மீண்டும் சிரிக்கிறது’ என்ற ஒரு ரசிகர் கூறியிருந்தார்.இதை பார்த்த சமந்தா இது தனக்குப் பிடித்திருப்பதாக சமந்தா கூறினார், மேலும், “ஆம்.. நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன், இந்த ஆண்டு மிகவும் பெரிய ஆண்டு. நிறைய அருமையான விஷயங்களைச் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன். நீங்கள் பார்ப்பீர்கள். ஒவ்வொரு மாதமும் புதிதாக ஏதாவது இருக்கும். உங்களை பெருமைப்படுத்துவேன் என்று நம்புகிறேன் என்று சமந்தா கூறியுள்ளார்.அப்போது ஒரு ரசிகர், ‘திரைப்படத் துறையில் சிறந்த கதாநாயகி’ பற்றி கேட்டபோது, இது குறிப்பிட்ட வரிசையில் இல்லாத சில சிறந்த நடிப்புகளுக்கு ஒரு பாராட்டு.” இந்தப் பெண்களை நான் நேசிக்கிறேன், அவர்கள் செய்யும் வேலையை நான் விரும்புகிறேன், அவர்கள் ரிஸ்க் எடுப்பது எனக்கு மிகவும் பிடிக்கும், அது எளிதானது அல்ல, அதனால் உல்லொழுக்கு படத்தில் பார்வதி, சூக்ஷ்ம தர்ஷினியில் நஸ்ரியா, அமரனில் சாய் பல்லவி, ஜிக்ராவில் ஆலியா பட் மற்றும் சி.டி.ஆர்.எல் படத்தில் அனன்யா பாண்டே ஆகியோருக்கு மிகப்பெரிய மரியாதை, இவர்கள் அற்புதமானவர்கள், ராக்ஸ்டார்ஸ் என்று சமந்தா கூறியுள்ளார்.மேலும், “ஆல் வி இமேஜின் அஸ் லைட், கனி, திவ்ய பிரபா, அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளனர். இந்த ஆண்டு அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் உற்று நோக்குகிறேன் என்று கூறிய சமந்தா, “நீங்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள் என்பதைப் பற்றியும், உங்களைப் பற்றி பெருமைப்படுங்கள், நீங்கள் இருக்கக்கூடிய சிறந்தவராக இருக்க ஒருபோதும் முயற்சிப்பதை நிறுத்தாதீர்கள் என்று சமந்தா தனது இறுதி உரையாக பதிவிட்டு லைவ் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன