Connect with us

பொழுதுபோக்கு

புதிய கார் வாங்கிய நியூ சீரியல் ஜோடி: கார் ஷோரூம் வீடியோ வைரல்!

Published

on

Serial actors car

Loading

புதிய கார் வாங்கிய நியூ சீரியல் ஜோடி: கார் ஷோரூம் வீடியோ வைரல்!

பிரபல சீரியல் நடிகை கண்மணி மனோகரன் தனது கணவர் அஸ்வத்துடன் இணைந்து புதிய கார் வாங்கியுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் முதன்மை கேரக்டரான கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை கண்மணி மனோகரன்.தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. ஒரு கட்டத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய அவர், ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலில் நடித்திருந்தார்.அதோடு மட்டுமல்லாமல் ஜீ தமிழில் சூப்பர் குயின் என்ற ரியாலிட்டி ஷோவில் தனது அம்மாவுடன் பங்கேற்றார் கண்மணி மனோகரன். அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். இதனிடையே சமீபத்தில் கண்மணி மனோகரன், தொகுப்பாளர் அஸ்வத் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.சன் டிவியின் மிஸ்டர் மனைவி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் அஸ்வத், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சீரியல் நடிகராகவும் வலம் வருகிறார். இவர் தொகுத்து வழங்கிய காலை வணக்கம் மற்றும் ரஞ்சிதமே நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது. திருமணத்திற்கு பிறகு, சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வரும் கண்மணி மனோகரன், தற்போது புதிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.A post shared by Aswath Chandrasekar (@aswath_official)திருமணம் முடிந்து சில மாதங்கள் ஆகியுள்ள நிலையில், கண்மணி அஸ்வத் இருவரும் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குடும்பத்துடன் ஷோருமில் இருக்கும் அஸ்வத் கண்மணி இருவரும் கேக் வெட்டி, கார் வாங்கியதை கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன