இந்தியா
ராஜஸ்தான் சட்டசபையில் ஆர்ப்பாட்டம்!

ராஜஸ்தான் சட்டசபையில் ஆர்ப்பாட்டம்!
ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சட்டசபைக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று (24) மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக ராஜஸ்தான் அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டக்கார்கள் பேரணியாக சட்ட சபைக்குள் நுழைய முற்படும் போது, அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முயற்சித்ததால் போராட்டம் வன்முறயைாக மாறியது.
போராட்டத்தின் வீடியோக்கள், ஆர்ப்பாட்டக்கார்கள் பொலிஸ் தடுப்புகளில் ஏற முயற்சிப்பதைக் காட்டியது, சிலர் உடல் ரீதியான மோதலில் ஈடுபட்டுள்ளனர்.