இலங்கை
அரிசித் தட்டுப்பாட்டுக்கு நாய்கள்தான் காரணமாம்

அரிசித் தட்டுப்பாட்டுக்கு நாய்கள்தான் காரணமாம்
ஆளுங்கட்சி எம்.பி. திலகநாதன் கண்டுபிடிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசித் தட்டுப்பாட்டுக்கு நாய்கள்தான் காரணம் என்று தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கால்நடை மருத்துவருமான செ.திலகநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசித் தட்டுப்பாட்டுக்கு நாய்களே பிரதான காரணம். ஏனெனில், இலங்கையில் 10 நபருக்கு ஒரு நாய் என்ற அடிப்படையில் நாய்களின் எண்ணிக்கை காணப்படுகின்றன. அத்துடன், மனிதர்களை விடவும் நாய்களே அரிசியை (சோறு) அதிகம் உணவாக உட்கொள்கின்றன. எதிரணியினர் (நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கிம்) நாய்களை வளர்க்காத படியால், இது தொடர்பான புரிதல் அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம் – என்றார்