இலங்கை
கனேமுல்ல படுகொலை:பழிவாங்கல் சதித்திட்டத்தில் இருவர் கைது!

கனேமுல்ல படுகொலை:பழிவாங்கல் சதித்திட்டத்தில் இருவர் கைது!
பாதாள உலகக் குழு உறுப்பினர் கெசல்பதர பத்மியின் மனைவியினது இல்லம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் வீடியோ எடுத்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பாதாள உலகத் தலைவர் கனேமுல்ல சஞ்சீவவின் படுகொலையை திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபராக கேசல்பதரபத்மி, பாயில் இருந்து செயற்படுவதாக நம்பப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.[ஒ]