இலங்கை
கிளிநொச்சியில் ஆசிரியர்கள், அதிபர்களின் பாதுகாப்பை உறுதிசெய்க!

கிளிநொச்சியில் ஆசிரியர்கள், அதிபர்களின் பாதுகாப்பை உறுதிசெய்க!
பதில் மாவட்டச் செயலரிடம் வலியுறுத்து
கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கிளிநொச்சி பதில் மாவட்டச் செயலர் எஸ்.முரளிதரனிடம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்தின் சார்பில் மனுக் கையளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்க பிரதிநிதிகள் நேற்றையதினம் கிளிநொச்சி மாவட்ட பதில் மாவட்டச் செயலரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இந்த மனுவைக் கையளித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாள்களாக அதிகரித்து வரும் வழிப்பறிக் கொள்ளைகள் மற்றும் அதிபர், ஆசிரியர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும் தங்களது பாதுகாப்புகளை உறுதிப்படுத்துமாறு கோரியே இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர்களிடமும், ஆசிரியர்களிடமும் கிளிநொச்சி பதில் மாவட்டச் செயலர் வாக்குறுதி வழங்கியுள்ளார்.