நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 26/02/2025 | Edited on 26/02/2025

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடித்துள்ள படம் ‘குட்-பேட்-அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். அஜித்துடைய காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

முன்னதாக இப்படத்தில் இருந்து அஜித்தின் லுக் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. அதில் அஜித் மாறுபட்ட தோற்றத்தில் இளமை தோற்றத்தில் இடம் பெற்றிருந்த நிலையில் அது அவரது ரசிகர்களை குஷி படுத்தியது. இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் த்ரிஷா இப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக சிறிய வீடியோ மூலம் படக்குழு வெளியிட்டது.

Advertisement

இந்த நிலையில் படத்தின் டீசர் அப்டேட் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 28அம் தேதி வெளியாகும் என டீசர் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அஜித்தின் இரண்டு கெட்டப் இடம்பெற்றுள்ளது. ஆனால் தெளிவாக தெரியவில்லை. அதை டீசரில் படக்குழு காட்டவுள்ளதாக தெரிகிறது. வழக்கமாக எந்த ஒரு அப்டேட்டுக்கும் நேரம் குறித்து அப்டேட் சொல்லும் படக்குழு இந்த முறை எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி இந்த ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  


<!–
–>

<!–உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

–>

Advertisement