இலங்கை
சாந்தனுக்கு துயிலாலயம்

சாந்தனுக்கு துயிலாலயம்
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனுக்கு அவரது குடும்பத்தினரால் துயிலாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சாந்தனின் வித்துடல் புதைக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் துயிலாலயம் நாளைமறுதினம் 28ஆம் திகதி சாந்தனின் தாயாரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.