தொழில்நுட்பம்
புது போன் வாங்க போறீங்களா? சாம்சங்கின் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்; ஃப்ளிப்கார்ட்டில் தள்ளுபடியுடன் பெறலாம்!

புது போன் வாங்க போறீங்களா? சாம்சங்கின் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்; ஃப்ளிப்கார்ட்டில் தள்ளுபடியுடன் பெறலாம்!
SAMSUNG Galaxy F06 5G: சாம்சங் கேலக்ஸி எஃப்06 5ஜி போன், இப்போது இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தென் கொரிய உற்பத்தியாளரால் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் 6.7 இன்ச் HD+ திரையைக் கொண்டுள்ளது. 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை ஸ்டோரேஜுடன், சாம்சங் கேலக்ஸி எஃப்06 5ஜி போன் இரண்டு வெவ்வேறு மாடல்களில் கிடைக்கிறது. மீடியாடெக் டைமென்சிட்டி 6300 SoC ப்ராஸசர் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் 5,000mAh பேட்டரி மற்றொரு சிறப்பு அம்சமாகும். இந்த போன் முதலில் வெளியிட்ட போது விற்பனைக்கு கிடைக்காவிட்டாலும், தற்போது சில தள்ளுபடியுடன் இதனை பெறலாம்.நீங்கள் இப்போது சாம்சங் கேலக்ஸி எஃப்06 5ஜி போனை ஃப்ளிப்கார்ட்டில் வாங்கலாம். அடிப்படை மாடல் விலை ரூ. 9,999. இது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. ரூ.11,499க்கு, 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. வயலட் மற்றும் ப்ளூ ஆகிய நிறங்களில் இவை கிடைக்கிறது.ஃப்ளிப்கார்ட் மற்றும் சாம்சங் சில சலுகைகளை வழங்குகின்றன. ஆக்சிஸ் வங்கி அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போனை வாங்கினால், ரூ.500 தள்ளுபடியை பெறலாம்.50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் ஆகியவை சாம்சங் ஸ்மார்ட்போனுடன் வரும் இரட்டை பின்புற கேமரா அமைப்பின் ஒரு பகுதியாகும். இது வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபிக்களுக்கான 8 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது.